செவ்வாய், ஏப்ரல் 08, 2014

ஊர்காவற்றுறையில் குடும்பஸ்தர் ஒருவர் புலனாய்வு பிரிவினரால் கைத
யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 11.15 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
2  பிள்ளைகளின் தந்தையான ஊர்காவற்றுறை ஆயித்தான்புலத்தைச் சேர்ந்த அந்தோனிசாமி வசந்தரூபன் (வயது 29)  என்பவரே இவ்வாறு புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டவராவார்.
ஊர்காவற்றுறையில் இரும்புக் கடை நடத்திவரும் இவரை இன்று அவரது கடைக்கு வந்த குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கைதுசெய்து யாழ்ப்பாணத்துக்குக் கூட்டிச் சென்றனர்.
கூடவே இவரது மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது