சனி, ஏப்ரல் 05, 2014

விழுந்தவன் மீசையில் மண்படாத கதையாக தனக்குத்தானே மகுடம் சூடும் நிலை:

ஐந்தாக இருந்த தமிழர் பிரதிநிதித்துவத்தை ரண்டாக்கி ஜ. ம. மு. வெற்றிச் சாதனை

தனது மனக் கவலையை நண்பர்களிடம் கொட்டித் தீர்த்தாராம் குமரகுருபரன்-அரச ஊடகம் 

கடந்த மேல் மாகாண சபையில் தெரிவு செய்யப்பட்ட நான்கு பேருடன் கொஸ்தாவின்வரவையடுத்து ஐந்தாக இருந்த தமிழரின் பிரதிநிதித்துவத்தை இம்முறை இரண்டாகக் குறைந்து தமிழ் மக்களுக்கு மேல் மாகாண சபையின் எவ்விதமான வரப்பிரசாதங்களையும் அனுபவிக்க முடியாது ஜனநாயக மக்கள் முன்னணி செய்துள்ளதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் நல்லையா குமரகுருபரன் தனது கட்சியின் தலைவரான மனோ கணேசன் மீது பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்தக் கசப்பான ஆனால் நிஜமான உண்மையை தமிழ் ஊடகங்கள் மறைத்து மனோ கணேசனைத் தமிழ் மக்களது ஹீரோவாக்கிக் கொண்டிருக்கின்றன என விடயம் தெரிந்த தமிழ் மக்கள் கவலைப்படுவதாகவும் அவர் தனது நண்பர்கள் வட்டாரத்திடம் கவலையுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தமது ஜனநாயக மக்கள் முன்னணி மூன்று தமிழ் ஆசனங்களைக் கைப்பற் றியிருந்தது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட தமிழரான ராமும் வெற்றி பெற்றிருந்தார். அத னைவிடவும் மற்றுமொரு தமிழரான கொஸ்தாவும் அதிகப்ப டியான வாக்குகளைப் பெற்று பட்டியலில் அடுத்ததாக இருந்து கொழும்பு மா நகர மேயராக முஸம் மில் தெரிவாக மாகாண சபை உறுப்பினரானார்.
ஆனால் மனோ கணேசன் இம்முறை தனித்துப் போட்டியிட்டு செல்வாக்கை அறிய முனைந்து மூக்குடைப்பட்டுள் ளதாகவும், எனினும் விழுந்தவன் மீசையில் மண் படவில்லை என்ற கதைபோல மேல் மாகாணத்தில் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தமிழ் மக்கள் தமக்கு வழங்கியுள்ளதாக தனக்குத்தானே மகுடம் சூடிக்கொண்டு கூறித்திரிகிறார் எனவும் குமரகுருபரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாது சகல விபரங்களும் அறிந்திருந்தும் சில தமிழ் ஊடகங்கள் இவை அனைத்திற்கும் ஆதரவாக இருந்து வருவதாகவும் குமரகுருபரன் மிகுந்த மனக் கவலையுடன் தனது நண்பர் களிடம் தெரிவித்ததாகவும் நம்பகர மாகத் தெரிய வருகிறது.