புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

உலக இளைஞர் மாநாட்டில் ஐ.நா பொதுச் சபையின் தலைவர் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரின் தலைவர் டாக்டர் ஜோன் வில்லியம் யெஷி எதிர்வரும் மே மாதத்தில் இலங்கையில் நடைபெறும் 2014ம் ஆண்டுக்கான உலக இளைஞர் மாநாட்டில் கலந்து
கொள்ளப்போவதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சகல அங்கத்துவநாடுகளுக்கும் அங்கத்துவம் வகிக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. என்டிகுவா, பாபுடா ஆகிய நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதி டாக்டர் வில்லியம் யெஷி 2015ம் ஆண்டின் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்கள் முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்னெடுக்கும் ஒரு சர்வதேச இராஜதந்திரியாக விளங்குகிறார்.
இவருடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான விஷேட தூதுவரான அஹமட் ஹல்ஹென்டா வியும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்களும் இந்த உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதாக உறுதியாக அறிவித்துள்ளார்கள்.
உலக இளைஞர் மாநாடு 2014 மே மாதம் 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவு ள்ளது.
இம்மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள 18க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட 1500 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இவர்களில் 350 பேர் பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

ad

ad