புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


சவூதியில் பணியாற்றுவோர் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர் களிடமிருந்து முறைப்பாடுகளைப் பதிவு
செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்க சேவையொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சவூதி அரேபியாவின் தொழில் அமைச்சு இந்த விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக சவூதி அரேபிய வாராந்த பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி சிங்குவா சர்வதேச செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தொலைபேசி சேவையின் மூலம் முறைப்பாடுகளைச் செய்ய விரும்புபவர்கள் எட்டு மொழிகளில் முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய முடியும் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சவூதி அரேபிய தொழில் அமைச்சு குறித்த தொலைபேசி இலக்கத்தின் மூலம் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதுடன், அந்நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் குறித்தும் தகவல்களை வழங்கவுள்ளன. இந்த விசேட தொலைபேசி இலக்கத்தின் மூலம் கிடைக்கப்பெறும் முறைப்பாடு களைப் பதிவுசெய்து, தேவையாயின் நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு முறைப்பாடுகளை அனுப்புவதற்கு சவூதி அரேபிய தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 1.2 மில்லியன் வீட்டுப் பணியாளர்கள் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad