புதன், ஏப்ரல் 02, 2014

,வாரணாசியில் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் அரவிந்த் கெஜ்ரிவால் சபதம்
வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டுள்ளார். மேலும், பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ராஜ்மோகன் காந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். நான் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றால் எளிதில் வெற்றி பெறக்கூடிய தொகுதியில் போட்டியிட்டிருப்பேன். என்னுடையை குறிக்கோள் மோடியை தோற்கடிப்பதே. அதனால் தான் நான் இந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறேன். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் தோற்கடிக்க வேண்டும். அதனால் தான் அமேதியில் குமார் விஸ்வாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இரண்டு பேர்களையும் தோற்கடிக்க வேண்டியதுள்ளது. அவர்கள் ஊழலையே நம்பிருக்கும் கட்சியின் தலைவர்கள் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், கெஜ்ரிவால், பாரதீய ஜனதாவில் இணையலாம் என்ற தகவல்களை அவர் மறுத்துள்ளார்.