புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2014


அமைச்சர் பெயர் சீலிட்ட கவரில் ஓட்டுக்கு நோட்டு 
வாக்கு பதிவு நெருங்கும் நேரம்.. வாக்காளர்களை விட வேட்பாளர்கள் அடையும் பதட்டம் அதிகம். ஆனால் இப்போது அமைச்சர்களும், மா.செ க்களும் தான் அதிகம் பதட்டமாக இருக்கிறார்கள். தான் சார்ந்துள்ள கட்சி வேட்பாளர் ஜெயிக்கவில்லை என்றால் கட்சி தலைமை தன்னிடம் உள்ள கட்சி பதவி, அமைச்சர் பதவிகளை பிடிங்கிக் கொள்ளுமே என்ற அச்சம் தான் அந்த பதட்டத்திற்கு காரணம்.
 


 மற்ற அமைச்சர்களுக்கு ஒன்று, இரண்டு தொகுதிகள் தான் பொறுப்பு.  ஆனால் புதுக்கோட்டை மாவட்ட த்தில் 6 சட்டமன்ற தொகுதிகளும் 4 பாராளுமன்றத் தொகுதிக்கு செல்வதால் 4தொகுதிக்கும் சேர்த்து அ.தி.மு.க அமைச்சரும், மா.செவுமான டாக்டர் விஜயபாஸ்கரே பொறுப்பு.


 அதனால் தான் இதுவரை ஆங்காங்கே கரகாட்டம் குத்தாட்டம் நடத்தி கட்சி தொண்டர்களை உற்சாகப் படுத்தி வந்தவர், கடந்த சில நாட்களாக கட்சி பொறுப்பாளர்களுக்கு கரன்சி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார்.


 நேற்று வியாழக் கிழமை மாலை 7 மணிக்கு கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு அ.தி.மு.க நிர்வாகிகளை அழைத்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் நிர்வாகிகள் குவிந்தனர். சரியாக ஏழு மணிக்கு அமைச்சரும் மா.செ.வுமான விஜயபாஸ்கர், ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.


 கிராமத்திற்கு சிலருக்கு மட்டும் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதி ச.ம.உ, மா.செ, செனட் உறுப்பினர் என்று பல பொருப்புகளையும் போட்டு ரப்பர் ஸ்டாம்ப் போடப்பட்ட வெள்ளை கவர் கொடுக்கப்பட்டது. கவரை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவர்கள் என்னய்யா 2 ஆயிரம் இருக்குன்னு சொன்னீங்க... ஆனா இதுல 500 தான் இருக்கு ஏமாத்துறீங்களா? என்று வெகுண்டு எழுந்தனர்.


 இதைப் பார்த்த அமைச்சர் டீம்.. யாரோ பறக்கும் படைக்கு போன் பண்ணிட்டாங்களாம் பறக்கும் படை வருது. எல்லாரும் கிளம்புங்க என்று ர.ர.க்களின் சத்தம் பெரிதாகும் முன்பே கூட்டத்தை களைத்துவிட்டு காரில் ஏறி பறந்துவிட்டார் அமைச்சரும் மாசெவுமா டாக்டர் விஜயபாஸ்கர்.


 ஊருக்கு ஒருத்தனுக்கு பணம் கொடுத்தா போதுமா? மத்தவங்களோட ஓட்டு வேண்டாமா என்ற முனு முனுப்பு கட்சி தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

ad

ad