புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2014

வடக்கு மாகாணசபை கைநழுவியது; கவலைப்படுகிறார் டக்ளஸ் 
வடக்கு மாகாண சபையில் உள்ளவர்கள் மக்களுடைய நலனைக் கருத்தில் கொள்ளாது, கடந்த கால செயற்பாடுகளை ஞாபகம் ஊட்டி அரசினால் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளுக்கும்
குறுக்கே நிற்கின்றார்கள் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.அரியாலை கிழக்குப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட சொன்டா நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை கையளித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிக நீண்டகாலமாக அடிப்படை தேவைகள் இன்றி வாழ்ந்து வரும் மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் வீதி புனரமைப்பு போன்ற தேவைகள் அனைத்தும்  மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும்.

அரியாலை கிழக்கு பகுதி மக்களுடைய தேவைகள் தொடர்பாக எனக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. அந்த வகையில் பல உதவித்திட்டங்களை இங்கு நான் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளேன்.

மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய வடக்கு மாகாண சபை எமது கைகளை மீறிப் போய்விட்டது.

தற்போது மாகாண சபையில் உள்ளவர்கள் மக்களுடைய நலனைக் கருத்தில் கொள்ளாது, கடந்த கால செயற்பாடுகளை ஞாபகம் ஊட்டிக் கொண்டு, மக்களுக்கு கிடைக்கும் உதவிகளுக்கும் குறுக்கே நிற்கின்றார்கள்.

இருப்பினும் அரசினால் 2014 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு என 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
 இந்தநிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக அரியாலை கிழக்குப் பகுதி மக்களுக்குத் தேவையான வீட்டுத்தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது 15 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஏனையவர்களுக்கும் இந்தியன் வீட்டுத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

மேலும் மிக நீண்ட காலமாக புணரமைக்கப்படாமல் உள்ள பிரதான வீதிகள் மிக விரைவில் புணரமைக்கப்படவுள்ளன. அதற்கான முன்னெடுப்புகளும் செய்யப்படவுள்ளன.

இதுதவிர மக்களுக்கான போக்குவரத்துச் சேவையினை சீராக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இதற்கு மக்கள் அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மீண்டும் பிரிவினைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.அரியாலை கிழக்குப் பகுதியில் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுவந்த 15 வீடுகளும் பூரணப்படுத்தப்பட்ட நிலையில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad