புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2014

நாங்கள் பயிர் வளர்த்தோம்; அதிமுகவினர் அறுவடை செய்ய முனைகிறார்கள்: வைகோம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது பிரசார கூட்டங்களில் அண்ணா தி.மு.க. அங்கம் வகிக்கும் அமைச்சரவை
என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றார். காங்கிரஸ், கம்யூனிடுகள் உதவியோடு ஆட்சி அமைத்து விடலாம் என்று கருதுகிறார்.

அதற்கு வழியே இல்லை. பேச்சுவார்த்தை நடத்த வந்த கம்யூனிஸ்டுகளை அவமதித்து வெளியேற்றி விட்டார். காங்கிரஸ் கட்சி இந்த முறை இரண்டு இலக்கங்களைத் தாண்ட முடியாது. அதிகபட்சமாக 99 இடங்கள்தான். 100 கூட வராது. எனவே, அதற்கு வாய்ப்பே இல்லை.
அப்படியானால், பாரதீய ஜனதா கூட்டணிக்குப் பெரும் பான்மைக்கு இடங்கள் தேவைப்பட்டால், அப்போது அண்ணா தி.மு.க. ஆதரவு தேவைப்பட்டால், அங்கே வந்து ஒட்டிக் கொள்ளலாம் என்று கருதுகின்றாரா?.
அதற்கும் வாய்ப்பு இல்லை. பாரதீய ஜனதா கட்சி மட்டுமே தனித்து 272 தொகுதிகளைக் கைப்பற்றும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 320 இடங்கள் கிடைக்கும். இது தான் நிலைமை.
நாளுக்கு நாள் நரேந்திர மோடி அலை பெருகிக் கொண்டே போகிறது. தமிழகம், புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் நமது அணியே வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் நமது கூட்டணியின் வெற்றிவாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மோடி அலை கிராமப்புறங்களிலும் வீசுவதாக, ஒருவார இதழ் கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருக்கின்றது.
இதைக்கண்டு, அண்ணா தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் இப்போது, கிராமப்புறங்களில் போய், மோடி பிரதமர் ஆக வேண்டுமானால், எங்களுக்கு வாக்கு அளியுங்கள். தேர்தலுக்குப் பிறகு அம்மா மோடியை ஆதரிப்பார் என்று கூறி வருகிறார்கள்.
நாங்கள் உழுதோம், விதைத்தோம், பயிர் வளர்த்தோம், பாதுகாத்தோம். ஆனால், இப்போது அண்ணா தி.மு.க.வினர் ஓட்டுகளை அறுவடை செய்ய முனைகிறார்கள். எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தோழர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

ad

ad