புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014

பூஸா தடுப்பு முகாமில் தாயைப் பார்வையிட விபூசிகாவிற்கு அனுமதி
பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை அவரது மகள் விபூசிகா சென்று பார்வையிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளளது.
கடந்த 31ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில்
சிறுமி விபூசிகா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயாரைச் சென்று பார்ப்பதற்கும் வீட்டிற்குச் சென்று அவரது உடமைகளை எடுத்து வருவதற்கும் சிறுமிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இதனையடுத்தே நீதிவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். அதன்படி சிறுவர் நன்னடத்தை அதிகாரி, மகாதேவா சிறுவர் இல்ல தலைவர் மற்றும் பொலிஸார் ஆகியோர் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அத்துடன் தாயாரைப் பார்ப்பதற்கு தேவையான ஆவணங்களையும் தமது பகுதி கிராம சேவையாளரிடம் இருந்து விபூசிகா பெற்றுக்கொண்டுள்ளார்.
இராணுவத்தினராலும் பொலிஸாராலும் தேடப்பட்டுவரும் கோபி என்கின்ற சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த மாதம் 13ஆம் திகதி ஜெயக்குமாரியும் விபூசிகாவும் தர்மபுரத்தில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad