புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2014

பெங்களூரை எளிதில் பணிய வைத்த ராஜஸ்தான் 
news
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய பெங்களூர் அணி துவக்கம் முதலே தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்கோர் உயரவில்லை. அதிகபட்சமாக விராட் கோலி 21 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்கள வீரர்களில் ஸ்டார்க் 18 ரன்களும், ராம்பால் 13 ரன்களும் எடுத்தனர். இதனால், அந்த அணி 15 ஓவர்களில் 70 ரன்களுக்குள் ஆல் ஆவுட் ஆனது.
ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய டாம்பே 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரிச்சர்ட்சன் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து 71 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ரகானே சிறப்பாக விளையாடி 23 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார். அதன்பின்னர் சாம்சன்(2), கருண் நாயர் (8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், பொறுப்புடன் ஆடிய வாட்சன் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்தில் அபிஷேக் நாயர் 3 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இதனால், ராஜஸ்தான் அணி 42 பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாயர் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இப்போட்டியில் மொத்தம் 28 ஓவர்கள் வீசப்பட்டன. இதில் 141 ரன்கள் மட்டும் அடித்ததுடன், 14 விக்கெட்டுகள் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad