புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014


அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் மதுரை ஆதீனத்தைநான் கோமாளியாக பார்க்கிறேன்: ராமகோபாலன் தாக்கு

கோவையில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மதுரை ஆதீனத்தை கடுமையாக தாக்கி பேசினார்.



அவர்,   ‘’தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரக்கூடிய தேர்தல். ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதற்காக நாடு இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் தீவிர ஆர்வம் காட்டி வரு கிறார்கள்.
இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை. இந்துக்களுக்கு ஆதரவான அரசு, மத்தியிலும் மாநிலத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்து முன்னணி பாடுபட்டு வருகிறது. மத்திய–மாநில அரசுகள் பெரும் பான்மையாக உள்ள இந்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
மோடி பிரதமரானால் நமது நாட்டை வளர்ச்சி பெற செய்வார். எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமராக்க, வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து, மோடிக்கு ஆதரவு கேட்க முடிவு செய்து உள்ளோம்.   எனவே அனைவரும் தவறாமல் ஓட்டுப்போட்டு மோடியை பிரதமராக்க வேண்டும். மோடி மனைவி குறித்து ஒரு சிலர் தனிப்பட்ட விமர்சனம் செய்து வருகிறார்கள். பெரிய தலைவர்கள் செய்யும் தவறுகள் குறித்த புகைப்படம் எங்களிடம் இருக்கிறது. அதை நாங்கள் வெளியிட தேவையில்லை. தானாகவே வெளிவந்துவிடும்.
தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எப்போதுமே பா.ஜனதா ஆதரவாகத்தான் இருக்கும். அதற்கு எதிராக எந்த ஒரு நிலைப்பாட்டையும் பா.ஜனதா எடுத்தால் அதை முதலில் எதிர்ப்பது இந்து முன்னணி யாகத்தான் இருக்கும்.
இந்து சமய அறநிலையத்துறை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது ஆகும். கோவில் நிலம் 6 லட்சம் ஹெக்டேர் இருந்தும் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது. எனவே அரசு கோவிலை விட்டு வெளியேறி, ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் மடாதிபதிகள், இந்து முன்னணி போன்ற சமுதாய அமைப்புகளிடம் ஒப்படைத்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மதுரை ஆதீனம் வெளிப்படையாக அ.தி.மு.க.வுக்கு பிரச்சாரம் செய்து ஆதரவு அளித்து பிரச்சாரம் செய்கிறார். அவரை நான் கோமாளியாகத்தான் பார்க்கிறேன். தனிப்பட்ட முறையில் பேசும்போது அவரை யாரும் கவனிக்கவில்லை. இப்போது அவரது ஆதரவுக்கு என்ன மதிப்பு, மரியாதை இருக்கும் என்று தெரியவில்லை. அவர் ஆதீனத்தின் மதிப்பையே கொச்சைப்படுத்திவிட்டார்’’என்று கூறினார்.

ad

ad