புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014

முன்னாள் ஈ பி டி பி  கமலேந்திரனின் அரசியல் அஸ்தமனம் .கமலின் கதிரையில் தவராசா அமர்த்தப்படவுள்ளார்?

வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சி தலைவராகவும் வெற்றிடமாகவுள்ள மாகாணசபை உறுப்பினர் பதவிக்கும் ஈபிடிபி முக்கியஸ்தரான தவராசா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது சிறையிலுள்ள கமலேந்திரன் வகித்து வரும் மாகாணசபை உறுப்பினர் மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவியினை இழப்பது உறுதியாகியுள்ள நிலையிலேயே தவராசாவின் நியமனம் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் முதன்மை வேட்பாளராக தவராசாவே களமிறங்கியுமிருந்தார்.

இதனிடையே  உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் பதவியிழந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவரது பதவி இழப்பால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, வடக்கு மாகாண சபையின் செயலாளரினால் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவுப் பிரதேசசபையின் தவிசாளரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கமலேந்திரன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் கொலை வழக்கில் சிக்கியதும் அவரை கட்சியை விட்டு நீக்குவதாக ஈ.பி.டி.பி. கட்சி அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார் என்று அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த அறிவித்தார்.  

இது தொடர்பிலான கடிதம் கந்தசாமி கமலேந்திரனுக்கும், மாகாணசபையின் செயலாளருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. குறித்த கடிதம் அனுப்பப்பட்ட பெப்ரவரி 7 ஆம் திகதியிலிருந்து ஒரு மாத காலத்தினுள், அதாவது மார்ச் 7 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலத்தினுள் தான் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டமைக்குக் கமலேந்திரன் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் அவர் அனுப்பியதாக கூறப்படும் கடிதம் பிந்தியே சென்றடைந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபை சட்டங்களின்படி அவர் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 

ad

ad