புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014


கொள்கை ரீதியாக வேறுபட்டு இருந்தாலும் எனக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது - மு.க.அழகிரி

தேனி மாவட்டம், கம்பத்தில் தி.மு.க. பிரமுகருடைய  மகள் காதணி விழா நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது
:–
இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளும் தகவல் கிடைத்ததும், மதுரையில் இருந்து கம்பத்திற்கு நான் வரும் வழியில் 20–க்கும் மேற்பட்ட இடங்களில் எனது ஆதரவாளர்களும், கழக தொண்டர்களும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
அதற்கு நான் எனது நன்றியை அவர்களின் பாதங்களின் வைத்து வணங்குகிறேன். என்னை பார்க்க நீங்கள் வந்துள்ளதை, எனக்கு புத்துணர்வு ஊட்டுவதாக நான் நினைக்கவில்லை. எனக்கு திரும்பவும் பதவி கிடைக்க வேண்டும், மத்திய மந்திரி பதவி, தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி கிடைக்க வேண்டும் என்று நினைத்து நான் வரவில்லை. கலைஞரை காப்பாற்ற வேண்டும், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இங்கு வந்துள்ளேன்.
1962–ல் தஞ்சையில் நடந்த தேர்தலில் பரிசுத்த நாடாரை எதிர்த்து கலைஞர் போட்டியிட்டபோது அவரது வெற்றிக்காக நானும், என் தம்பி மு.க.ஸ்டாலினும் பாடுபட்டோம். இணைந்து தேர்தல் பணியாற்றினோம். கொள்கை ரீதியாக நாங்கள் இருவரும் வேறு, வேறாக இருந்தாலும் எங்களுக்குள் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது.
இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆரூண் என் நண்பர் தான். இப்போது என்னை வந்து சந்தித்து வரவேற்பு அளித்தார். மண்டபத்திற்கு வெளியே ம.தி.மு.க. வேட்பாளர் அழகுசுந்தரம் என்னை சந்தித்து எனக்கு வரவேற்பு அளித்தார். ஆரூண் ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார். அதனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட தகுதி இருக்கிறது.
இந்த மாவட்ட மக்களுக்காகவும், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையின் போதும் வைகோ பல்வேறு போராட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தி உள்ளார். அதனால் ம.தி.மு.க. வேட்பாளர் அழகுசுந்தரத்திற்கும் போட்டியிட தகுதி உள்ளது. ஆனால் தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்திற்கு என்ன தகுதி இருக்கிறது? கட்சி விட்டு கட்சி தாவியவர் அவர். வைகோ தி.மு.க.வில் இருந்து பிரிந்து செல்ல முக்கிய காரணமே தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தான். ஆனால் வைகோவையும் ஏமாற்றிவிட்டு மீண்டும் தி.மு.க.வுக்கு பொன்.முத்துராமலிங்கம் வந்துவிட்டார்.
கட்சியை காப்பாற்ற வேண்டும். இந்த தேர்தல் கடைசி தேர்தலாக இருக்க ஆசைப்படுவதாக கலைஞர் கூறியுள்ளார். பதவிக்காக அலைபவர்களுக்கு தான் இது கடைசி தேர்தல். தமிழர்கள் காக்கப்பட வேண்டும். தமிழ் இனம் காக்கப்பட வேண்டும். தலைவர் இல்லை என்றால் தி.மு.க. இல்லை. நீங்கள் எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டியது ஒன்று தான். திருச்செந்தூரில் வைத்து 40–க்கு 40 என்று கூறினேன். அதேபோன்று 40 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றோம். திருமங்கலத்தில் 40 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினேன். அதேபோன்று 40 ஆயிரம் ஓட்டுக்கு மேல் பெற்று வெற்றியை பெற்றோம். இங்கு 4 என்று சொல்லி இருக்கேன். நான்கு என்பதை செய்யணும். என்று மு.க.அழகிரி பேசினர்.

ad

ad