செவ்வாய், ஏப்ரல் 08, 2014

தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.

 
தொடர்ந்து நாளை நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இதேவேளை பாராளு மன்றத்தில் நாளை நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் 20-20 உலக சம்பியன்கள் கலந்து கொள்ளவுள்ளதால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளால் செய்யப்பட்டுள்ளது.