புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2014


பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வேட்புமனு விவகாரம் – நீதிமன்றத்தை நாட முடிவு!
ஆரணி நாடாளமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை நடந்தன. திமுக வேட்பாளர் சிவானந்தம், அதிமுக வேட்பாளர் ஏழுமலை, காங்கிரஸ்
  வேட்பாளர் விஷ்ணுபிரசாத் மனுக்கள் சரியாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த் தியின் வேட்புமனு பிரச்சனையாகியுள்ளது.


ஏ.கே.மூர்த்தியின் வேட்புமனுவின் முதல் பக்கத்தில் தன் மீது எந்த வழக்கும் இல்லை என கூறியுள்ளார். ஆனால் விரிவாக தரப்பட்ட மனுவின் உள் பக்கத்தில் என் மீது ஒரு புகார் உள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றிய பிரச்சனையின் போது ஆரணி தொகுதி தேர்தல் அலுவலர் பத்மஜாதேவி, அதெல்லாம் ஒன்றுமில்லை என மனுவை ஏற்றுக்கொள்ளும் போது காங்கிரஸ், திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் மேற்பார்வையாளர் லஷ்மணரகராவிடம் புகார் கூறியுள்ளனர்.
அவர் விசாரித்தபோது, ஸ்பெல்லிங்மிஸ்டேக். என் மீது எந்த வழக்குமில்லை என ஏ.கே.மூர்த்தி தரப்பில் உறுதியாக தெரிவித்து எழுதி தரப்பட்டுள்ளது. அதனை ஏற்று மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி ஏ.கே.மூர்த்தி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலு வையில் உள்ளது. வழக்கு எண் 3396/2007. எழும்பூரில்உள்ள சென்ட்ல் கிரைம் ப்ராஞ்ச் இந்த வழக்கு பதிவு செய்துள்ளது. ராஜேஷ்கண்ணன் என்பவர் புகார் தந்தவர்.
வழக்கு பற்றிய ஆதாரத்துடன் வேறு ஒரு கட்சி வேட்பாளர் நீதிமன்றம் செல்லவுள்ளார். அதோடு, தவறாக மனு இருந்தால் அதை தள்ளுபடி செய்திருக்க வேண்டும் அதைசெய்யாமல் விட்டது தவறும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடவுள்ளதாக நம்மிடம் கூறினர்.

ad

ad