புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014



அ.தி.மு.க (1991-96) ஆட்சியில் நடைபெற்ற சுடு காட்டுக்கொட்டகை ஊழல் வழக் கில் அப்போதைய அமைச்சரும் இப்போதைய தி.மு.க ராஜ்யசபா எம்.பியுமான செல்வகணபதிக்கு சி.பி.ஐ கோர்ட்டால் இரண் டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, செல்வகணபதியை ராஜினாமா செய்யச் சொன்னார் கலைஞர். அவரும் உடனடியாக ராஜினாமா செய்தார். ஜெ. மீதான வழக்கு களில் இப்படித் தீர்ப்பு வந்தாலும் ராஜினாமாவை தி.மு.க வலியுறுத் தும் என்பதால்தான் இந்த நிலைப் பாடு. இந்நிலையில், ஜெ. மீதான வருமான வரி வழக்கு விசாரணை யின் நீதிபதி தட்சிணாமூர்த்தி மாற்றப்பட்டு அங்கு செல்வ கணபதிக்கு தண்டனை அளித்த நீதிபதியான மாலதி நியமிக்கப்பட் டார். ஆனால், அன்று மாலையே நீதிபதி தட்சிணாமூர்த்தி மீண்டும் அந்த இடத்தில் நியமிக்கப்பட, நீதித்துறை வட்டாரத்தினருக்கே ஆச்சரியம். 

இதனிடையே, ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை ரத்தான மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 25ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும்னு கோவை யில் ஒரு பொதுவிழாவில் தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்தார். அரசியல் விளைவை ஏற்படுத்தக்கூடிய வழக்கின் தீர்ப்பு தேதி குறித்து இப்படி பொதுவிழாவில் அறிவிப்பது நீதித்துறைக்கு உகந்ததா எனக் கலைஞர் அறிக்கை விடுத்ததுடன், தென்சென்னை பொதுக்கூட்டத்தி லும் இது பற்றி பேசினார். இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளை பேச வைக்க ஆளுந்தரப்பு முடிவு செய்து அவருக்குத் தகவல் தெரிவித்திருப்பது பற்றி நக்கீரன் ஏற் கனவே தெரிவித்திருந்தது. அதுபோலவே ஏப்ரல் 20-ந் தேதி பத்திரிகை யாளர்களை சந்தித்துப் பேசினார் அற்புதம்மாள். 

சட்டவல்லுநர்கள் இதுபற்றி தெரிவிக்கும்போது, தலைமை நீதிபதி சதாசிவம் ரிடையர்டாவதற்குள் ஜட்ஜ்மெண்ட் வராதோ என்ற எண்ணம் பலரிடமும் இருந்தது. அதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் 25ந் தேதிக்குள் தீர்ப்பு வரும் என்று அவர் சொன்னார். அது அரசியல் ரீதியாக வேறுவகையில் புரிந்து கொள்ளப்பட்டு பரபரப்பை உண்டாக்கிவிட்டது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, நளினியை பரோலில் விடுவதற்கே எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு அடுத்த 5 நாளில் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு உடனடியாக உத்தரவிட்டதன் பின்னணியும் நோக்கமும் என்ன என்பது முக்கியமானது. அதுபோல, ஆயுள்தண்டனைக் கைதிகள் சம்பந்தப்பட்ட முடிவு, மரணதண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட முடிவு என ஒவ்வொன்றையும் கவனித்து மாநில அரசுகளுக்கு உள்ள சட்டரீதியான அதிகாரங்கள் என்னென்ன என்பதும் வரையறுக்கப்படுகிறது. எல்லாம் முடிந்து 25-ந் தேதி தீர்ப்பு வரும் எனத் தெரிவிக்கிறார்கள்.

ad

ad