புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2014

 நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை 
நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லி போலீசார், இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் 4 பேரை கைது செய்தனர். அவர்கள், நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே தேசிய புலனாய்வு அமைப்பு உள்பட 3 உளவுத்துறை அமைப்புகள் இதுகுறித்து விசாரணையை தொடங்கின.

இதில் தற்போது அவர்களுக்கு புதிய அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. நரேந்திர மோடி மீது தற்கொலை படையை சேர்ந்த மனித வெடிகுண்டு, ஆதரவாளர் போல் வந்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த மனித வெடிகுண்டு ஆணா? பெண்ணா? என்று தெரியாது. இந்த தாக்குதல் மோடி போட்டியிடும் வாரணாசி அல்லது வதோதரா தொகுதியில் நடைபெறக் கூடும் என்று உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி யாசின் பத்கலிடம் விசாரணை நடத்தியதிலும் மோடி மீதான தாக்குதல் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது. எனவே, உளவுத்துறை பல்வேறு மாநிலங்களுக்கு குறிப்பாக உத்தரபிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களுக்கு இதுபற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோடி பிரசாரம் செய்யும் இடங்களில் குறிப்பாக உ.பி., குஜராத்தில் அதிகபட்ச பாதுகாப்பு வழங்க போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையை அறிவுறுத்தி உள்ளோம். மோடி தவிர ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தி உள்ளோம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இது குறித்து பா.ஜ.க.வில் சேர்ந்துள்ள முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறும்போது, ''இப்போது மட்டுமல்ல, நான் உள்துறை செயலாளராக இருக்கும்போதே நரேந்திர மோடி தான் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். எனவே, அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றார்.

ad

ad