புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


தமிழக அரசியலின் மையமே மதுரை என்று சொல்லலாம். அனைத்துவிதமான அரசியல் அதிர்வுகளும் இங்கிருந்துதான் கிளம்பும். இந்த முறை பெரிய புள்ளிகள் களத்தில் இல்லாததால் சற்றே சுறுசுறுப்புக் குறைவுதான்.


அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், மதுரையில் அறிமுகம் ஆனவர்.  துணை மேயராக இருந்து அமைச்சர் செல்லூர் ராஜுவின் அபிமானத்தைப் பெற்று, சீட் வாங்கியவர். அ.தி.மு.க-வில் யாதவ சமுதாயம் சார்பாகப் போட்டியிடும் ஒரே வேட்பாளர் என்பதால், அந்த சமூகத்தின் வாக்குகள் மொத்தமாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொகுதிக்குள் நிலவும் குடிநீர் பிரச்னையும் மின்வெட்டும் இவருக்கு வில்லனாக நிற்கிறது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாங்கி வைத்திருக்கும் கெட்ட பெயர், அவரை நிம்மதி இல்லாமல் செய்யலாம்.
தி.மு.க. வேட்பாளர் வக்கீல் வேலுசாமி, கட்சியில் மிச்சமிருக்கும் சீனியர்களில் ஒருவர். எம்.எல்.ஏ-வாக இருந்தவர். ''பலமுனை போட்டி நடப்பதால், தி.மு.க-வுக்கு என்று  உள்ள ஓட்டுகள் மொத்தமாகக் கிடைக்கும். ஈசியா ஜெயிச்சிடலாம்'' என்று கட்சியினரிடம் உற்சாகமாகச் சொல்லி வருகிறார். தி.மு.க-வினரும் ரொம்ப உற்சாகமாக வேலைசெய்து வருகிறார்கள். 'அழகிரியும் அவர் ஆட்களும் ஓரங்கட்டப்பட்டது தி.மு.க-வுக்கு இருந்த அடாவடி இமேஜைப் போக்கியிருக்கிறது. அவரால் எந்தப் பாதிப்பும் இல்லை’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.
தங்கள் கட்சிக்கு மதுரையை ஒதுக்க வேண்டாம் என்று தலைவர்களுக்கு பெட்டிஷன் போடும் அளவுக்கு பி.ஜே.பி-க்குள் கோஷ்டிப்பூசல். அதனாலேயே தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. சிவமுத்துக்குமார் போட்டியிடுகிறார். வேட்பாளர் மாற்றப்படலாம் என்ற புரளி இருந்ததால், பெரிதாக வேலை நடக்கவில்லை. சௌராஷ்டிரா, பிரமலைக் கள்ளர் வாக்குகளை மலையாக நம்புகின்றனர். சௌராஷ்டிரா மக்களில் பெரும்பாலானவர்கள் பி.ஜே.பி-யை ஆதரிப்பார்கள். அவர்களது வாக்குகள் முழுமையாக தனக்கு விழும் என்று இவர் நம்புகிறார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பரத் நாச்சியப்பனுக்கு, சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராம்பாபு கடுமையாக வேலை செய்கிறார். நாச்சியப்பன் கள்ளர் சமுதாயத்தவர் என்பதால், அந்த மக்களின் வாக்குகளையும் பெரிதாக நம்புகிறார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு என்று வாக்கு வங்கி உள்ளது. தொழிலாளர்கள் மட்டுமல்ல, வர்த்தகர்கள் வட்டாரத்திலும் தோழர் விக்கிரமனைத் தெரியாதவர்கள் யாருமில்லை. கணிசமாக இவர் வாக்குகளைப் பிரிப்பார். யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பதே கணிக்க முடியாததாக உள்ளது.
இங்கு கோபாலகிருஷ்ணனுக்கும் வேலுச்சாமிக்கும்தான் போட்டி. இலை பலத்தை நம்பி கோபாலகிருஷ்ணனே முன்னேறுவார்.

*****

நெற்களஞ்சியமான தஞ்சையில் இரட்டை இலை, உதயசூரியன், தாமரை, கை, அரிவாள் சுத்தியல் ஆகியவை களம் காண்கின்றன. இருந்தாலும் இலைக்கும் சூரியனுக்கும் இடையில்தான் போட்டி!
டெல்டாவில் பிரதான தொழில் விவசாயம். 'விவசாய ந¤லங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயுத் திட்டம் வரக் காரணம் யார்?’ என்று தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறி மாறி போஸ்டர் யுத்தம் நடத்துகின்றன. 'நம்மாழ்வார் உயிரோடு இருந்திருந்தால், தி.மு.க-வை எதிர்த்து போட்டியிட்டு இருப்பார். நாம் அதைச் செய்ய வேண்டும்’ என்ற சீமானின் பிரசாரம் டெல்டா விவசாய சங்கங்களை உசுப்பிவிட்டிருக்கிறது. பழனிமாணிக்கத்துக்கு மீண்டும் சீட் ஒதுக்காதது, தஞ்சையில் தி.மு.க. வெல்லக் கூடாது என்று மு.க.அழகிரி உறுதியாக இருப்பது ஆகியவை தி.மு.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றன.  அ.தி.மு.க. வேட்பாளர் கு.பரசுராமன், சொந்தக் கட்சியினரிடையே அதிகம¢ அறிமுகம் இல்லாதவர். 'அபாயப் பட்டியலில் தஞ்சை இருக்கிறது’ என்று உளவுத் துறை ரிப்போர்ட் கொடுக்க, கடுமையான கோபத்தை ஏரியா அமைச்சர் வைத்திலிங்கத்திடம் தலைமை காட்டியதாம். அதனை அடுத்து வைத்திலிங்கம், 'கோஷ்டிப் பூசல்களை மறந்துவிடுங்கள்’ என¢று கட்சியினரை சமாதானப்படுத்தியதோடு, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் நேரடியாக சென்று ஓட்டுக் கேட்டுவருவது, அ.தி.மு.க-வினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் தந்தை துளசி அய்யா வாண்டையார் இங்கே எம்.பி-யாக இருந்திருக்கி¢றார். இவருக்கு சொந்தமான பூண்டி புஷ்பம் கல்லூரியில் மாணவர்களுக்கு டொனேஷன் இல்லாமல் சீட் தருவதால், கல்விக் காவலர் என¢ற பட்டம் உண்டு. கட்சியையும் தாண்டி தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அவரது திரைமறைவு தேர்தல் வேலைகள் கை கொடுப்பதால், கணிசமான வாக்குகள் கிடைக்கும். சி.பி.எம். வேட்பாளர் தமிழ்ச்செல்விக்கு கட்சி ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.
பி.ஜே.பி. சார்பில் கருப்பு முருகானந¢தம் களத்தில் இருக்கிறார். தஞ்சையில் பா.ம.க. ஓட்டுக்கள் அதிகம் இல்லை. தே.மு.தி.க., ம.தி.மு.க. ஓட்டுக்கள் மட்டுமே சுமாராக உள்ளன. ராஜ்நாத்சிங் பிரசாரம் கொஞ்சம் கை கொடுத்துள்ளது.
இந்தா பிடி அந்தா பிடி என்று இழுபறியாக இருந்தாலும், கடைசி நேரத்தில் இலையை சூரியன் முந்தவே வாய்ப்பு அதிகம்.

****

முல்லை பெரியாறுக்காக உக்கிர போராட்டம் நடத்திய தொகுதி தேனி.
அ.தி.மு.க. சார்பில் பார்த்திபனும் தி.மு.க. சார்பில் பொன்.முத்துராமலிங்கமும் ம.தி.மு.க. சார்பில் அழகுசுந்தரமும் காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஆரூணும் களத்தில் நிற்கிறார்கள்.
பார்த்திபனின் பிரசாரத்தில் வேகம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக இந்தத் தொகுதியை எதிர்பார்த்து இருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ். மகன் நின்றிருந்தால் பிரசாரம் கடுமையாக இருந்திருக்கும். பார்த்திபனுக்கு ஒப்புக்காகத்தான் அனைவரும் வேலை பார்க்கிறார்கள். குடிக்க நீர் இல்லை என்பது தொகுதியில் பெரிய பிரச்னையாக இருக்கிறது. விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டுவர வெட்டிய 58-ம் கால்வாய் அ.தி.மு.க-வின் வில்லனாக மாறிவிட்டது. ஆனாலும் எம்.ஜி.ஆர். காலத்து இரட்டை இலை பக்தி இன்னும் அப்படியே இருக்கும் தொகுதி என்பதால், அந்த வாக்காளர்கள் இதுபற்றி அதிகம் கவலைப்படுபவர்களாக இல்லை. அதுதான் அ.தி.மு.க-வின் பெரிய பலம்.
தி.மு.க. சார்பில் நிற்கும் பொன்.முத்துராமலிங்கம், மதுரையிலேயே அரசியல் செய்தவர். மாவட்டச் செயலாளர் மூக்கையாவும் இவரை அலட்சியமாகப் பார்க்கிறார். அழகிரியின் குடைச்சல் அதிகம். இதனால் அவருக்குப் பிரசாரம் பண்ணுவதற்குக்கூட யாரும் வருவது இல்லை. பழைய அறிமுகங்களை வைத்து பிரசாரம் செய்கிறார்.
ம.தி.மு.க-வுக்காகப் பம்பரமாய் சுழல்வது இளைஞர்கள்தான். முல்லை பெரியாறு பிரச்னைக்காக தொடர்ந்து மாநில எல்லையில் போராட்டம் நடத்தியதை ம.தி.மு.க-வினர் தெருத்தெருவாகச் சொல்கிறார்கள். 'ம.தி.மு.க-வைத் தோற்கடிக்க கேரள தொழில் அதிபர்கள் பணத்தை இறக்கி இருக்கிறார்கள்’ என்று வைகோ சொன்னதும் இந்தத் தொகுதியில் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  போட்டியே அ.தி.மு.க-வுக்கும் ம.தி.மு.க-வுக்கும்தான்.
வாக்காளர்களுக்கு 'செக்’ வைத்து தனக்கே உரித்தான பாணியில் கவர்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண். முஸ்லிம் வாக்குகளையும் அதற்கு அடுத்தபடியாக தேவேந்திரகுல வேளாளர்கள் சமுதாயம், குரும்ப கவுண்டர்கள் வாக்குகளைக் கவர பல வித்தைகளை காட்டுகிறார் ஆரூண்.
அ.தி.மு.க-வின் கோட்டை ஆண்டிபட்டி. இரண்டு லட்சம் ஓட்டுகள் அங்கு அ.தி.மு.க-வுக்கு நிரந்தரம். அதனால், தேனி தொகுதியில் அ.தி.மு.க-வின் வெற்றியும் நிரந்தரம்.

ad

ad