புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014

கோபி மற்றும் இருவரின் உடற்பாகங்கள் பரிசோதனை
வவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கோபி மற்றும் இருவரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.


கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்றழைக்கப்படும் நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகியோரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மூன்று சடலங்களும் இந்து முறைப்படி அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் ராஜா மஹேந்திர ராஜ நடத்தினார் என்றும், அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.

நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது. உடற்பாகங்கள் மற்றும் இரத்தமாதிரிகள் பதவிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் கதிரேஷன் கோவிலின் குருக்கள் ஞானசந்திரன் இறுதி கிரிகைகளை நடத்தினார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட போது ஊடகவியலாளர்கள் எவரும் மயானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.எனினும் இறுதி கிரியைகளில் கோபியின் மனைவி பங்கேற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad