சனி, ஏப்ரல் 05, 2014

இதுவே எனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம்! கலைஞர் உருக்கம்!கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கலைஞர்,தி.மு.க., தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல. இன எழுச்சிக்காக, இன உணர்வுக்காக
தொடங்கப்பட்ட இயக்கம். இந்த தேர்தல் என்னுடைய கடைசி தேர்தலாக இருக்கலாம். கூட்டணி கட்சி தலைவர்களை ஏமாற்ற மாட்டோம். நேரத்துக்கு நேரம் மாற்றிக்கொள்கின்ற பச்சோந்தி கூட்டமல்ல. 

மக்களுக்கான நல்லாட்சியை தரவேண்டிய கால கட்டாயத்தில் உள்ளோம். தமிழகத்தின் பண்பாடுகளை பாதுகாக்க உயிரையும் கொடுப்போம். தமிழ்நாடு பொட்டல்காடாக ஆகவேண்டும் என்றால் அதிமுகவிற்க்கு வாக்கு அளியங்கள். தமிழ்மொழி இனம் தள்ளாடக்கூடாது என உறுதிமொழி எடுத்தகொண்டவன் நான். பெரியார் அண்ணாவால் உருவாக்கபட்ட இயக்கம்