புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014


காவிரி நதிநீர் பிரச்னை பற்றி கருணாநிதியுடன் நேருக்கு விவாதிக்க தயார் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

வேலூரில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து ஆரணியில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.


அப்போது அவர் பேசுகையில், ''மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசால் நாட்டில் பொருளாதாரம் வீழச்சியடைந்துள்ளது. காங்கிரஸ் பிடியில் இருந்து நாட்டை காப்பாற்றும் தருணம் வந்து விட்டது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவை காக்க காங்கிரசை அகற்ற வேண்டும்.
தமிழர் நலனின் காங்கிரஸ், பா.ஜ.க. கடசிகளுக்கு அக்கறை இல்லை. மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைவதே அ.தி.மு.க.வின் லட்சியம். மத்திய அரசின் உதவியின்றி, தமிழகத்தில் குடிநீர் திட்டங்கள், ஏரி சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எண்ணற்ற நலத்திட்டங்களை மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது.

தி.மு.க. மீது குற்றச்சாட்டு

மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்குறை மாநிலமாக மாற்றியது கடந்த தி.மு.க. அரசுதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மத்திய காங்கிரஸ் அரசில் கூட்டணி வகித்த தி.மு.க. தமிழக மின் திட்டங்களில் கவனம் செலுத்தவில்லை.

தற்போது எனது தலைமையிலான அரசு மின் பற்றாக்குறையை போக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 12,170 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 3,190 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். கடந்த 3 ஆண்டுகளில் 30 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கிய நேரத்தில் மின் நிலையங்கள் பழுதடைந்து முடங்கியுள்ளது. இதேபோல், ஏற்காடு இடைத்தேர்தலின்போதும் மின் உற்பத்தி முடங்கி தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒவ்வொரு தேர்தலின்போதும் மின் தட்டுபாடு ஏற்படுவதும் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அ.தி.மு.க. அரசை குறை கூறுவதும் சந்தேகமளிக்கிறது.
 
கருணாநிதியுடன் விவாதிக்க தயார்
காவிரி நதி நீர் பிரச்னையில், கருணாநிதியின் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். காவிரி நதிநீர் பிரச்னை பற்றி கருணாநிதியுடன் நேருக்கு விவாதிக்க தயாராக இருக்கிறேன். காவிரி நதிநீர் தொடர்பான கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று விவாதிக்க நான் தயார். என்னுடன் சட்டப்பேரவையில் கருணாநிதி மட்டும்தான் விவாதிக்க வேண்டும். இதற்கு கருணாநிதி தயாரா?'' என்றார்.

ad

ad