செவ்வாய், ஏப்ரல் 08, 2014

சாம்பியன்களுக்கு பலத்த வரவேற்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.)  5 ஆவது உலக இருபது-20 கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு இன்று தாய் நாட்டில் உற்சாக வரேவேற்பு அளிக்கப்பட்டது. 
பங்களாதேஷில் நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டில் இந்திய அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு மீண்டுமொரு உலகக்கிண்ணத்தை  வென்று கொடுத்த சம்பியன்கள் கோலகலமாக வரவேற்கப்பட்டனர். பங்களாதேஷிலிருந்து இன்று பி.ப. 3.30 மணிக்கு இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  இலங்கை அணியினர் வந்தடைந்தனர். விமான ஓடுபாதையில் சம்பியன்களின் விமானம் தரயிறங்கியதும் வரவேற்பின் ஆரம்பகட்டமாக இருமருங்கிலுமிருந்து நோக்கி நீர்  பீச்சியடிக்கப்பட்டது.
பின்னர் சம்பியன் அணித்தலைவர் லசித் மலிங்க கிண்ணத்துடன் விமானத்திலிருந்து வெளியேற தொடர்ந்து அணி வீரர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர், உபதலைவர் மற்றும் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதனையடுத்து சுமார் 4.30 மணியளவில் உலக சம்பியன்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திறந்த பஸ்ஸில் விமான நிலையத்திலிருந்து பலத்த உற்சாகத்துக்கு மத்தியில்  வெளியே அழைத்து வரப்பட்டனர்.
ஐபில் நுணுக்கங்களை பயன்படுத்தினேன்: லசித் மாலிங்க
இறுதிப் போட்டியில் நாம் திறமையான பந்து வீச்சை மேற்கொண்டிருந்தோம். இறுதி ஓவரை மிக நுணுக்கமாக வீசியிருந்ததாக இந்திய அணித் தலைவர் டோனி தெரிவித்திருந்தார். இந்திய அணி வீர்கள் இறுதி ஐந்து ஓவர்களில் அதிரடியாக ஓட்டம் பெறும் வல்லமைகொண்டவர்கள். நான் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றமையால் நிறைய இந்திய அணி வீரர்களுடன் பழக கூடிய சந்தர்பம் கிடைத்த அதேவேளை அவர்கள் எவ்வாறு துடுப்பெடுத்தாடுவார்கள் அவர்களுக்கு எவ்வாறான பந்து வீச்சுகளை மேற்கொள்ள வேண்டு போன்ற நுணுக்கங்களையும் அறிந்து வைத்திருந்தேன். 
இந்த நுணுக்கங்களை பயன்படுத்தியே இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களில் சுமார் 25 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஓட்ட இலக்கை மட்டுப்படுத்தியிருந்தோம்.
குறிப்பாக அதிர்ஷ்டத்தை நம்பி விளையாடும்; வீரர் நான் அல்ல. அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் விiயாடியமையாலேயே எம்மால் கிண்ணத்தை வெற்றிகொள்ள முடிந்தது. 
இதேவேளை இத்தொடருடன் ஓய்வு பெரும் சிரேஸ்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் உதவியுடனும் அணியின் பயிற்சியாளர்களின் உதவியுடனும் கிண்ணத்தை எம்மால் கைப்பற்ற முடிந்து. மேலும் தினேஷ் சந்திமால் சிறந்த அணித் தவைலர். முதல் மூன்று போட்டிகளில் அவருடைய தலைமையில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது. இறுதி மூன்று போட்டிகளில் அணித் தலைவராக செயற்பட்டமையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.
கிண்ணத்தை வெல்வதே இலக்காக இருந்தது: தினேஷ் சந்திமால்
1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலக கிண்ணமொன்றை கைப்பற்றியதையிட்டு நான் மனதளவில் மிகவும் சந்தோசமடைகின்றேன். இத்தொடரில் சுப்பர்-10 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் உரிய நேரத்தில் பந்து வீசி முடிக்கத்தவறியமையால் போட்டித் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிய கிண்ணத் தெடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக பிரகாசித்திருந்த இளம் வீரர் திரிமானவுக்கு வாய்ப்பு வழங்கினேன். அணியில் ஒரு சிறந்த வீரர் இருக்கும் போது அவரை மறைவாக வைத்து வாய்ப்பு வழங்காமல் விiளாயாடுவது சிறந்த விளையாட்டு வீரருக்கு அழகு அல்ல. எனவே அவருக்கு நான் வாய்ப்பு வழங்கினேன். அதை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
மேலும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக நான் விளையாட்டில் பிரகாசிக்கவில்லை. கிண்ணத்தை நாட்டுக்கு வென்று கொடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தமையால் நானாக தொடரிலிருந்து விலகிகொண்டேன். அந்தவகையில் லசித் மாலிங்க தலைமையில் அணி கிண்ணத்தை கைப்பற்றியது. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியை வழிநடத்த முடியாது என இருந்து வந்த ஒரு எண்ணக்கருவை மாலிங்க தகத்தெரிந்துள்ளார்.
மேலும் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, டில்சான் மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரின் முழு பங்களிப்பு மூலமும் கிண்ணத்தை கைப்பற்றியதை இட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்;.
2015 உலக கிண்ணத்துக்கு தயாராகுவோம்: சங்கக்கார, ஜயவர்தன
சுமார் 18 வருடங்களின் பின் மீண்டுமொரு உலக கிண்ணத்தை இருபது-20 தொடரில் முதன் முறையாக வெற்றிகொண்டதையிட்டு மகிழ்ச்சிடைகின்றோம். எமது அணியின் திறமையால் கிண்ணத்தை வென்றுள்ளோம். இதுபோன்று நிகழ்வுக்காக நாம் நீண்ட காலம் காத்திருந்தோம். இன்று அது நிறைவேறியுள்ளது. சர்வதேச இருபது-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெரும் நாம் இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் எமது கவனத்தை செலுத்துவோம். குறிப்பாக அடுத்த வருடம் இடம்பெற உள்ள ஒருநாள் உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் முகமாக எம்மை தயார்படுத்துவதோடு அதற்கு முன்னயை போட்டிகளில் திறமையாக விளையாடி எமது புள்ளிகளை அதிகரித்து கொள்வோம். மேலும் எமது உடல் தகுதி மற்றும் போர்ம் நிலையையும் கவனத்தில் கொண்டு இனிவரும் காலங்கில் விளையாடுவதா இல்லையாக என தீர்மானிப்போம்.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியின் அனைத்து வீரர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டதோடு அணியின் சிரேஷ்ட வீரர்களான சங்கக்கார மற்றும் ஜயவர்தன ஆகியோருடன் கலந்துரையாடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
காலிமுகத்திடலில் விழாக்கோலம்
காலிமுகத்திடலில் பாரிய அரங்கு அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகளும் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. கடும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிர கணக்கான ரசிகள் இலங்கை அணி வீரர்களை ஆரவாரம் செய்து மகிழ்ச்சி பொங்க தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடும் மழையிலும் இலங்கை வீரர்கள் நனைந்த வண்ணம் ரசிகர்களை நோக்கி தமது கரங்கi அசைத்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.