சனி, ஏப்ரல் 05, 2014

நடிகர் வடிவேலு வீட்டை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்த வந்தவர்கள் கைது
நடிகர் வடிவேலு தெனாலிராமன் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படம் திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது.  இந்நிலையில், இப்படத்தில் கிருஷ்ணதேவராயரை தவறான முறையில்
சித்தரித்துள்ளதாக தெலுங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.


இதனால் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலு வீட்டை, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவையினர்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர்.  போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்துகொண்டிருந்தபோதே, போலீசார் அவர்களை கைது செய்தனர்.