செவ்வாய், ஏப்ரல் 08, 2014

அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்துமாறு சிங்கள அமைப்புக்கள் மனுத் தாக்கல்
பிரித்தானியாவில் வசிக்கும் அடேல் பாலசிங்கத்தை நாடுகடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் என்று, வெளிநாடுகளில் வசிக்கின்ற சிங்களவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கம், தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
அவர்களை இலங்கைக்கு அழைத்து, அவரை தூக்கிலிட வேண்டும் என்று, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சிங்கள பேரினவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.
இதன் மூலம் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பான சர்வதேசத்தின் பார்வையை திசை திருப்ப முடியும் என்று அந்த அமைப்புகள் ஆலோசனை வழங்கியிருப்பதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.