புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2014

சிறிலங்காவுக்கு எதிரான முன்னகர்வு: நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை கூடுகின்றது

இலங்கைத் தீவில் தமிழினத்தின் மீது போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரச தலைவர்கள், இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியல் மற்றும் சிறிலங்காவின் வர்த்தகமானி அறிவித்தலுக்கு எதிரான முன்னகர்வு தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று கூடுகின்றது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரவைக் கூட்டத்திலும் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இடம்பெறுகின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழர் தரப்பின் முன்னகர்வுக்கு செயல்வடிவம் கொடுப்பது குறித்து முடிவு எட்டப்பட இருப்பதோடு, அரசவை உறுப்பினர்களையும் உள்ளாக்கிய சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இதேவேளை சிறிலங்கா அரசியல்வாதிகளுக்கு பயணத் தடையை விதிக்க புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக செய்தியொன்றினை வெளியிட்டுள்ள சிங்கள அரச ஆதரவு ஊடகமொன்று, சொத்து முடக்கம் போன்றவற்றை விதிப்பதே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் இலக்காக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அனைத்துலக சட்டங்களுக்கு புறம்பாக போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட குறித்த இந்த நபர்களது பெயர்விபரங்களை அனைத்துலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதோடு, அவர்களது சொத்துக்களை முடக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளனர்.
அத்துடன், பயணத் தடைகளையும் இடுமாறும் உலக நாடுகளை கோர இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில் இச்செய்தி வெளிவந்துள்ளது.

ad

ad