புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

வ்வொரு கட்சியும் தனித் தனியாகப் போட்டியிடுவதால் சர்வே களமும் வித்தியாச மாக இருந்தது. பெரும்பாலான மக்கள் கருத்து சொல்ல மிகுந்த தயக்கம் காட்டினர். பலர், யாருக்கு வாக்கு என முடிவே எடுக்காமல் இருந்தனர். கள அனுபவம் சுவாரஸ்யமாகவே இருந்தது.

""முன்ன எல்லாம் எங்க வீட்டுக்காரரு சொல்ற கட்சிக்கு ஓட்டு போடுவேன். இப்போ அவருகிட்ட கேட்டால், "எனக்கே யாருக்கு போடுறதுன்னு தெரியலடி'ன்னு சொல்றாரு. அதனால ஒரே குழப்பமா இருக்கு''’என்றார் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரத்தில் நாம் சந்தித்த பெண்மணி. வனவாசியிலோ, ""யாருக்கு போட்டு என்ன பிரயோஜனம். எவ்ளோ நெஞ்ஜாலும் பொடவை விக்காம நாங்க படுற கஷ்டம் யாருக்கு தெரியும்?''’என்றார் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நெசவாளி ஒருவர்.

நங்கவள்ளியிலோ,’""தம்பி... எல்லோரும்  மோடிக்காக, ராகுலுக்காகன்னு வோட்டு போடு றதா சொல்றாங்க. நாங்க எங்க தி.மு.க. காசிக்காக (நெசவாளர் அணி செ.)தான் வோட்டு போடுறோம் அது எப்பவுமே உதயசூரியனுக்குதான்''’என்றனர் வீடு தவறாமல். லோக்கல் கட்சி நிர்வாகிகளின் சொந்த செல்வாக்கு, சாதி செல்வாக்கு ஆகியவை எல்லாக் கட்சிகள் தரப்பிலும் வெளிப்பட்டது.

""எங்க வன்னியர் சாதிக்காரங்களுக்கு ஒண்ணுமே மந்திரி செய்யலைங்க. போஸ்டிங், காண்ட்ராக்ட்னு எல்லாமே அவங்க சொந்த வெள் ளாள கவுண்டர்களுக்குத்தான் செய்றாரு. அதனால இந்தமுறை நாங்க மாத்திப் போடுவோம்''’என்றனர் எடப்பாடியில். டவுனிலோ, ""மந்திரி கல்லூரி கொண்டு வந்துருக் காரு. சாலை வசதி செஞ்சுருக்காரு. ஜெய லலிதாம்மாவுக்காக போடுறமோ இல்லையோ, மந்திரி எடப்பாடி பழனிசாமிக்காக இந்தமுறை எலைக்கு போடு வோம்''’என்றனர் அங்கே நிரம்பியிருந்த மீனவ மக்கள்.

""ஏன் கண்ணு இந்த வேகாத வெயில்ல இப்படி அலையுறீங்களே. கொஞ்சம் மோர் சாப்பிட்டு போங்க''’என்றார் ஓமலூர் தீவட்டிபட்டியில் ஒரு பாட்டி மிகுந்த மனிதாபிமானத்துடன். ‘""ஏம்மா டவுனுகாரங்க அவங்க, மோர் சாப்பிடுவாங்களா போயி கலரு வாங்கிட்டு வாம்மா''’என அன்பில் உருகினார் அருகில் இருந்த பாட்டி. அவர்களின் அன்புக்கு நன்றி சொல்லி, கருத்துகளைக் கேட்டு தாகம் தணித்தோம்.

இளம்பிள்ளையிலோ ""கண்ணு வோட்டு லிஸ்ட்ல என் பேரையே காணோம். லிஸ்ட்ல இல்லைனா பணம் தரமாட்டாங்களாம்... பேசிக்கிறாங்களே அப்படியா?''’என அப்பாவியாக கேள்வி கேட்டார் ஒரு மூதாட்டி.

சேலம் தெற்கு, வடக்கு தொகுதியைச் சேர்ந்த மாநகரத்தின் பச்சப்பட்டி, ஜங்சன், ரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளில் ""எவ்வளவு பணம் தருவீங்க?''’என்று நம்மிடமே கேட்டனர். ’"ஏம்மா டிக் அடிக்க எல்லாம் பணமா?'’என்றோம்.’""ஆமாப்பா, சின்னத்தைக் காட்டி ஓட்டு போடச் சொன்னாலும் டிக் அடிக்கச் சொன்னாலும், எல்லாத்துக்குமே பணம்தான்''’என்று அவர் சொல்ல... மாயாஜாலப் படங்களில் வருவதுபோல படாரென ‘எஸ்கேப்’ ஆனோம்.

ஒரு போலீஸ்காரர் வீட்டில் ‘உதயசூரியனுக்கு டிக் அடித்துவிட்டு ""தயவு செய்து வெளிய சொல்லிடா தீங்கப்பா... சொல்லிடாதிங்கப்பா...''’என திரும்பத் திரும்பக் கூற, "யார் பெயரும் இதில் வராது'’என நம் பிக்கை தந்துவிட்டு திரும்பினோம்...

அழகாபுரத்தில் "யாருக்குப்பா அதிக டிக்?'’என கேட்டபடி நம் கையில் இருந்த சர்வே தாள்களை வாங்க ஒருவர் முற் பட... ‘""ஏப்பா நாம யாருக்கு வோட்டு போட்டோம்னு மத்தவங்களுக்கு காட்டுறதுக்காக ஸ்லிப்பை வெளியவா எடுத்துட்டு வர்றோம்? அப்படியிருக்க இந்த தம்பிகள்கிட்ட மட்டும் அப்படி கேட்கலாமா? இது தப்பு''’என்றனர் அருகிலிருந்தவர்கள் நியாயக் குரலில்.

களத்தில் அ.தி.மு.க. சற்று முந்த, அடுத்ததாக தி.மு.க. துரத்த, தே.மு. தி.க.வின் நட்சத்திர வேட்பாளர் சுதீஷ் கூட்டணி பலமிருந்தும் ஒத்துழைப் பின்மையால் திணற... மற்றவர்கள் சீனிலிருந்து வெகுதூரம் வெளியில் இருப்பது தெரிந்தது. பலமுனை போட்டியால் பலவித கருத்துகளும் மக்களிடமிருந்து வெளிப்பட சேலம் சர்வே சித்திரை வெயிலிலும் சொர்க் கத்து சுகத்தையே தந்தன.

க்களின் மனக்கொதிப்பை அதிகம் வெளிப்படுத்திய தொகுதிகளில் முதன்மையானது கரூர். நமது சர்வே களத்திலும் அந்தக் கொதிப்பை பருவநிலையிலும் மக்களின் மனதிலும் காண முடிந்தது. கரூர் சட்டமன்றத் தொகுதியைத் தவிர மற்ற 5 சட்டமன்றத் தொகுதிகளும் கிராமப்புறங்கள் நிறைந்தவை என்பதால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கம் இவர்களிடம் இல்லை.

வேடசந்தூர் பகுதியில், ""அய்யா ஆட்சியில் எல்லா இலவசமும் சீக்கிரமா வந்துச்சு. ஆனா இப்ப அம்மா ஆட்சியில் சொல்லிக்கிட்டே இருக்காங்க... ஆனால் எப்ப வரும்னு தெரியல. நீங்க ஏதாவது சொல்ல முடிஞ்சா சொல்லுங்க'' என்கிறார்கள்.

""தம்பி இந்த கரண்ட் பிரச்சினை உண்மையிலே சரியாயிடுமா? இதுல யாரு உண்மைய சொல்றா? அம்மாவா, கலைஞரா?'' என்று நம்மிடமே நிறையபேர் சந்தேகத்தைக் கேட்டார்கள்.

விராலிமலை பகுதியில் உள்ள கிராமங்களில், ""இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுறது தான் எம்.ஜி.ஆருக்கு நாங்க பண்ற கடமை. யாரு வேட்பாளர்னு நாங்க கவலைப்படுறதில்லை'' என்று பெருமையாகவே சொல்கிறார்கள்.

அரவக்குறிச்சி பகுதியில் உள்ள பெண்கள் ""எங்க வீட்டுக்காரர் சூரியனுக்கு ஓட்டு போட சொல்லி சொல்லுவார். ஆனா எனக்கு விஜயகாந்தக்கு ஓட்டு போடணும்னு ஆசை. நாம ஓட்டு போடுறது யாருக்கும் தெரியபோறது இல்ல. வீட்டுகாரர் சொல்றதைத்தானே கேட்கணும்?'' என்றார் அப்பாவித்தனமான விவரத்துடன்.

""நீங்க எப்படிக் கேட் டாலும் நான் சொல்ல மாட்டேன் ஏனா ஊருக் குள்ள இப்ப பெரிய பிரச்சினை. முக்கியமான வுங்க எல்லாம் இந்தத் தேர்தல்ல ஓட்டு போட வேணாம்னு நேத்து தான் சொன்னாங்க. அதுக்குள்ள ஒரு கட்சிகாரன் வந்து, "நீங்க தேர்தலைப் புறக்கணிச்சா, எனக்கு மரியாதை கெட் டுப்போயிடும். என்னை ஒதுக்கி வச்சுடுவாங்க'ன்னு சொன்னதால,  வேண்டா வெறுப்பா "யாருக்கு வேணா லும் ஓட்டப் போட்டுக் குங்க'ன்னு ஊர்ப்பெரியவங்க முடிவு பண்ணிட்டாங்க. ""யாருக்கு ஓட்டு போடுவதாலும் எதுவும் நடக்கப் போறதில்லை. கஷ்டப்படுறவன் இன்னும் கஷ்டப் பட்டுக்கிட்டுதான் இருக்கான்'' என்றார்.

""பஸ்ஸ புடிச்சு டவுனுக்கு போக முடியல. எல்லா காசையும் ஏத்திட்டாங்க. நல்லது செய்றேன்னு சொல்லி ஓட்டு வாங்குறவங்க அப்புறம் செய்றதேயில்லை. அதெல்லாம் இருக்கட்டும் தம்பி, நீங்க யாருக்காக ஓட்டு கேக்குறீங்க, அத சொல்லுங்க. அப்புறம் என் ஓட்டு யாருக்குன்னு சொல்றேன்'' என்றார் ஒரு பெரியவர் விவ(கா)ரமாக.

இந்தத் தேர்தலினால் எதுவும் நடக்கப்போவது இல்லை என்பதே மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துள்ளது. அதனால் தான் வேறெந்த தேர்தலிலும் இல்லாமல் இந்த முறை ஆளுங்கட்சி வேட்பாளருக்கு பல இடங்களிலும் நேரடி எதிர்ப்பு வெளிப்பட்டது. மற்ற வேட்பாளர்கள் மீதும் மக்களுக்குப் பெரிய நம்பிக்கையில்லை. "நாளைக்கு நீங்க சம்பாதிக்கப் போறதால இன்னைக்கு எங்களை கவனிங்க' என்ற மனநிலை ஓட்டுக்குப் பணம் வாங்கும் மக்களிடம் உள்ளது. ஏதாவது அதிசயம் நடந்து, நம்ம பிரச்சினைகள் தீராதா என்ற எதிர்பார்ப்பு  வாக்காளர்கள் பலரிடம் உள்ளது. அதற்காகவே அவர்கள் சலிப்பான மனநிலையிலும் "மறக்காமல் வாக்களிக்க வேண்டும்' என நினைக்கிறார்கள்.

எதிர்ப்புக் குரல் கள் பலமாக இருந் தாலும் எம்.ஜி.ஆரின் சின்னம் என்ற சென்ட்டிமென்ட்டில் இரட்டை இலை இங்கே முந்துகிறது. அதுபோலவே ஒவ் வொரு கட்சிகளுக்கும் உள்ள வாக்கு வங்கி, அதனதன் தலைவர்கள் மீதான மக்களின் ஈர்ப்பு ஆகியவை மற்ற கட்சிகளுக்குக் கை கொடுக்கிறது. அந்தவகையில் அ.தி.மு.க.வை உதயசூரியன் பின்தொடர்கிறது. மற்றவர்கள் அடுத்தடுத்து வருகிறார்கள். ஜெயிப்பது யாராக இருந்தாலும் மக்களின் மனங்களை வெல்வதில் அனைத்துக் கட்சிகளுமே தோல்வியடைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது கரூர் தொகுதி.

ர்மபுரி மோதலின் வெப்பம் இன்னும் இங்கே பல பகுதி களிலும் இருப்பதை உணர முடிகிறது. போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம் பகுதிகளில் இருக்கும் வன்னிய சமூகத்தினர் ""எதிர்தரப்பால் நாங்க அவமானப்படறோம். வெளில போனாலே பி.சி.ஆர். வழக்குப் போடுவாங்க போலிருக்கு'' என காட்டம் காட்ட... அதற்கு எதிர்தரப்போ, ""எங்களை மனுஷனா கூட அவங்க மதிக்கிறதில்லை. அவமானப் பிறவியா நாங்க?'' என்கிறார்கள் பதிலுக்கு.

தளி, பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் கிருஷ்ணன், ""எங்க மலைக் கிராமத்தின் பேரு பெட்ட முகிவாலம். எங்க கிராமங்கள்ல எங்காவது பீஸ் போனாக்கூட ஆளுக வந்து சரிபண்ண ஒருவாரம் ஆயிடும். அதனால் மோடி வந்தா எங்க நிலைமை மாறும்னு நினைக்கிறோம்'' என்கிறார் நம்பிக்கையாய்.

மின்வெட்டு, இலைத்தரப்பின் வோல்ட்டேஜைக் குறைப்பதையும் உணர முடிந்தது. வேப்பனஹள்ளி பாஷாவோ, ""தினசரி 12-ல் இருந்து 15 மணி நேரம் வரை கரண்ட் போயிடுது. அதனால் இருட்டும் புழுக்கமும்தான் வாழ்க்கையா இருக்கு. பசங்க படிக்க முடியலை. அதனால்  இந்தமுறை இலைக்கு ஓட்டு இல்லை'' என்றார் எரிச்சலாய். இலை வேட்பாளரின் சொந்த ஊரான வேப்பனஹள்ளியிலேயே சூரிய ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. ""இலவசத்தைக் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கலாம்னு பாக்குறாக. எலைக்கு எதிராதான் ஓட்டுப் போடுவோம்'' என்கிறார்கள் வன்னி யம்மாளும் செண்பகமும்.

இளைஞர்கள் சிலரை நோட்டோ கவர் கிறது. ""யாரு வந்து இங்க என்ன ஆகப்போகுது. அரசியலே சாக்கடையா இருக்கு'' என்கிறார் நோட்டோ ரசிகரான ஊத்தங்கரை பாபு.

சுண்டகிரியில் நாம் சந்தித்த பெரியவர் பெரியசாமி ""எனக்கு 94 வயசாகுது. கண்ணு சரியா தெரியலை. காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அவருக்கு நன்றிக்கடனா நான் எப்பவும் கை பக்கம்தான் இருப்பேன்'' என்றார் நெகிழ்ச்சியாய்.

தொகுதியில் பரவலாக  இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் பெரும்பான்மை ஆதரவு சூரியத் தரப்பிற்கே இருக்கிறது.

மத்தாஸ்பள்ளியில் மழை வேகமெடுக்க, சுகுணா கோழிப்பண்ணையில் ஒதுங்கினோம். அங்கிருந்த பணியாளர்கள் ""எங்களுக்கு மாம்பழம் பிடிக்கும். சாதி மாம்பழம்'' என்றார்கள்.  

""நாங்க 43 சமூகம் ஒண்ணா சேர்ந்து தேசிய மக்கள் கட்சியை நிறுத்தியிருக்கோம்'' என்கிறார் பிள்ளைமாரான வேலு.

-வடிவேலு & சர்வே டீம் 

க்களின் மனக்கொதிப்பை அதிகம் வெளிப்படுத்திய தொகுதிகளில் முதன்மையானது கரூர். நமது சர்வே களத்திலும் அந்தக் கொதிப்பை பருவநிலையிலும் மக்களின் மனதிலும் காண முடிந்தது. கரூர் சட்டமன்றத் தொகுதியைத் தவிர மற்ற 5 சட்டமன்றத் தொகுதிகளும் கிராமப்புறங்கள் நிறைந்தவை என்பதால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கம் இவர்களிடம் இல்லை.

வேடசந்தூர் பகுதியில், ""அய்யா ஆட்சியில் எல்லா இலவசமும் சீக்கிரமா வந்துச்சு. ஆனா இப்ப அம்மா ஆட்சியில் சொல்லிக்கிட்டே இருக்காங்க... ஆனால் எப்ப வரும்னு தெரியல. நீங்க ஏதாவது சொல்ல முடிஞ்சா சொல்லுங்க'' என்கிறார்கள்.

""தம்பி இந்த கரண்ட் பிரச்சினை உண்மையிலே சரியாயிடுமா? இதுல யாரு உண்மைய சொல்றா? அம்மாவா, கலைஞரா?'' என்று நம்மிடமே நிறையபேர் சந்தேகத்தைக் கேட்டார்கள்.

விராலிமலை பகுதியில் உள்ள கிராமங்களில், ""இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுறது தான் எம்.ஜி.ஆருக்கு நாங்க பண்ற கடமை. யாரு வேட்பாளர்னு நாங்க கவலைப்படுறதில்லை'' என்று பெருமையாகவே சொல்கிறார்கள்.

அரவக்குறிச்சி பகுதியில் உள்ள பெண்கள் ""எங்க வீட்டுக்காரர் சூரியனுக்கு ஓட்டு போட சொல்லி சொல்லுவார். ஆனா எனக்கு விஜயகாந்தக்கு ஓட்டு போடணும்னு ஆசை. நாம ஓட்டு போடுறது யாருக்கும் தெரியபோறது இல்ல. வீட்டுகாரர் சொல்றதைத்தானே கேட்கணும்?'' என்றார் அப்பாவித்தனமான விவரத்துடன்.

""நீங்க எப்படிக் கேட் டாலும் நான் சொல்ல மாட்டேன் ஏனா ஊருக் குள்ள இப்ப பெரிய பிரச்சினை. முக்கியமான வுங்க எல்லாம் இந்தத் தேர்தல்ல ஓட்டு போட வேணாம்னு நேத்து தான் சொன்னாங்க. அதுக்குள்ள ஒரு கட்சிகாரன் வந்து, "நீங்க தேர்தலைப் புறக்கணிச்சா, எனக்கு மரியாதை கெட் டுப்போயிடும். என்னை ஒதுக்கி வச்சுடுவாங்க'ன்னு சொன்னதால,  வேண்டா வெறுப்பா "யாருக்கு வேணா லும் ஓட்டப் போட்டுக் குங்க'ன்னு ஊர்ப்பெரியவங்க முடிவு பண்ணிட்டாங்க. ""யாருக்கு ஓட்டு போடுவதாலும் எதுவும் நடக்கப் போறதில்லை. கஷ்டப்படுறவன் இன்னும் கஷ்டப் பட்டுக்கிட்டுதான் இருக்கான்'' என்றார்.

""பஸ்ஸ புடிச்சு டவுனுக்கு போக முடியல. எல்லா காசையும் ஏத்திட்டாங்க. நல்லது செய்றேன்னு சொல்லி ஓட்டு வாங்குறவங்க அப்புறம் செய்றதேயில்லை. அதெல்லாம் இருக்கட்டும் தம்பி, நீங்க யாருக்காக ஓட்டு கேக்குறீங்க, அத சொல்லுங்க. அப்புறம் என் ஓட்டு யாருக்குன்னு சொல்றேன்'' என்றார் ஒரு பெரியவர் விவ(கா)ரமாக.

இந்தத் தேர்தலினால் எதுவும் நடக்கப்போவது இல்லை என்பதே மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துள்ளது. அதனால் தான் வேறெந்த தேர்தலிலும் இல்லாமல் இந்த முறை ஆளுங்கட்சி வேட்பாளருக்கு பல இடங்களிலும் நேரடி எதிர்ப்பு வெளிப்பட்டது. மற்ற வேட்பாளர்கள் மீதும் மக்களுக்குப் பெரிய நம்பிக்கையில்லை. "நாளைக்கு நீங்க சம்பாதிக்கப் போறதால இன்னைக்கு எங்களை கவனிங்க' என்ற மனநிலை ஓட்டுக்குப் பணம் வாங்கும் மக்களிடம் உள்ளது. ஏதாவது அதிசயம் நடந்து, நம்ம பிரச்சினைகள் தீராதா என்ற எதிர்பார்ப்பு  வாக்காளர்கள் பலரிடம் உள்ளது. அதற்காகவே அவர்கள் சலிப்பான மனநிலையிலும் "மறக்காமல் வாக்களிக்க வேண்டும்' என நினைக்கிறார்கள்.

எதிர்ப்புக் குரல் கள் பலமாக இருந் தாலும் எம்.ஜி.ஆரின் சின்னம் என்ற சென்ட்டிமென்ட்டில் இரட்டை இலை இங்கே முந்துகிறது. அதுபோலவே ஒவ் வொரு கட்சிகளுக்கும் உள்ள வாக்கு வங்கி, அதனதன் தலைவர்கள் மீதான மக்களின் ஈர்ப்பு ஆகியவை மற்ற கட்சிகளுக்குக் கை கொடுக்கிறது. அந்தவகையில் அ.தி.மு.க.வை உதயசூரியன் பின்தொடர்கிறது. மற்றவர்கள் அடுத்தடுத்து வருகிறார்கள். ஜெயிப்பது யாராக இருந்தாலும் மக்களின் மனங்களை வெல்வதில் அனைத்துக் கட்சிகளுமே தோல்வியடைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது கரூர் தொகுதி.

நாகர்கோவில், மார்த்தாண்டம், குழித் துறை, சுங்கான்கடை போன்ற நகர்ப்பகுதிகளில் இதற்குமுன் வாக்களிக்காதவர்கள்கூட, இந்த முறை வாக்களிப்பதில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர். தேர்தல் ஆணை யத்தின் அதிரடி நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இரணியலில், செட்டியார் தெரு பகுதியில், நம் படிவத்தை ஒரு பெண்மணியிடம் கொடுத்த தும், வேகமாக ஓடிவந்து அதைப் பறித்தார், அவரது மகளான கல்லூரி மாணவி. “ ""ரகசியமா போடுற ஓட்டை வெளியே சொல்லக்கூடாது. யாருக்கு ஓட்டுப்போடுவீங்கனு நீங்க சொல்ல முடியுமா?''’என நம்மிடம் ஆவேசம் வந்ததைப் போல கேட்டார், அந்த மாணவி. 

""ஓட்டுக்காக சிலர் பணத்தை வாங்கினாலும், அதுக்காக விருப்பத்துக்கு மாறாக ஓட்டுப் போடமாட்டோம்'' என்றனர், சாமித்தோப்பு கிராமத்தில். செண்பகராமன்புதூர் அகத்தியர் காலனியில், ""நீங்க அம்மா கட்சிக்காரங்களா.. ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்னு சொன்னாங்களே.. அதைத் தரத்தான் வந்திருக்கீங்களா?''’என நம்மைச் சூழ்ந்துகொண்டனர், சில பெண்மணிகள். அவர்களிடம் விளக்கம் சொல்லி விடு படுவதற்குள் போதும்போதும் என்றாகி விட்டது. 

குளச்சல் மூங்கில்விளை சோமகன், ""73 வயசான எனக்கு தெரிஞ்சது எல்லாம் யார் வந்தாலும் ஊழல் கண்டிப்பாக செய்வாங்க. ஏன்னா? அந்தப் பதவி அப்படிப்பட்டது. பாலைத் திறந்துவச்சிட்டு இருந்தா பூனை அதப் பாத்திட்டு இருக்குமா? புலி புல்லைத் தின்னுற காலம் தம்பி இது''’என்றார். 

காங்கிரஸ் வாக்குகளில் கடந்த முறைவரை காங்கிரசுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் போட்டுவந்தனர். ஆனால் இந்த முறை காங்கிரஸ் தனித்து விடப்பட்டது; 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனியாகப் போட்டி யிடுவது, மற்ற கட்சிகளுக்கு இணையாக தங்கள் வாக்குகளை மொத்தமாகப் பதிவுசெய்ய வேண்டும் எனத் தீர்மானமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. 

சி.பி.எம். கட்சி கடந்த முறை டெபாசிட் இழந்த நிலையில், இந்த முறை எப்படியும் அந்த அளவுக்கு மோசமாகிவிடக் கூடாது என்பதில் விழுந் தடித்துக்கொண்டு வேலை செய்திருக்கிறார்கள். முந்திரி ஆலை, தையல் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் என தொழிலாளர்கள் மத்தியில் சி.பி.எம். மீது ஒரு அனுதாபம் இருக்கிறது. இதே பரிவு மற்ற மக்களிடம் அவ்வளவாகத் தென்படவில்லை. 

தாழக்குடி, லாயம் கிராமங்களில் தேர்தல் நடப்பதைப் போலவே தெரியவில்லை. எந்த கட்சியின் படமும் கொடியும் அங்கு இல்லை. கருத்துக் கேட்ட நம்மிடம், ""தேர்தல் வந்துருச்சா, அதுக்குள்ள?''’என்றனர் சில முதியவர்கள்.’""போன முறை, ஓட்டுப்போட்டா முதியோர் பென்சன் வாங்கித் தருவேன்னு கூட்டிட்டுப் போனாங்க. வருசம்தான் ஆச்சி, இதுவரை தரலை. நீங்களாவது வாங்கித் தருவியளா?''’என்று கேட் டார், ஒரு பாட்டி. 

முட்டம் மீனவ கிராமத்தில் கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு இரண்டே இரண்டு ஓட்டுகள்தான் கிடைத்தன. இந்த முறை முதல் முறையாக அங்கு பூத் கமிட்டி அமைத்துள்ளது பா.ஜ.க. 

""அதிக எழுத்தறிவு பெற்ற இந்த தொகுதியில் மற்ற இடங்களில் இல்லாத தனி பிரச்சினை. படித்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் கல்லூரி படிப்பு முடித்தவுடன், வேலைக்காக சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்குதானே செல்லவேண்டியுள்ளது; அந்த வாய்ப்புகளை ஏன் இங்கேயே உருவாக்க முடியவில்லை?''’என ஆதங்கப்படுகிறார்கள். 

""புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தால், சின்ன பாத்ரூம் முதல் பெரிய பங்களாவரை எந்த புதிய கட்டிடமும் கட்ட முடியாத நிலைமை உருவாகியுள்ளது; இதை யாரும் கேட்பதற்கில்ல'' என வெதும்புகிறார்கள், ஆரல்வாய்மொழி, புலியூர்க்குறிச்சி, தடிக்காரன் கோணம், குலசேகரம், பொன்மனை மலையை ஒட்டிய பகுதி மக்கள். 

""அரசு ரப்பர் தொழிற்சாலை, மலர் ஆராய்ச்சி நிலையம், குட்டி விமானநிலையம் வந்தால்கூட அதில் கொஞ்சம் பேருக்காவது பயன் கிடைக்கும்'' என பட்டியலிடுகிறார்கள், பட்டதாரிகள். 

""காங்கிரஸ் ஐ.மு. கூட்டணி அரசின் முதல் ஆட்சியில் தேங்காய்ப்பட்டினத்தில் துறைமுகம் அமைக்க ஆய்வெல்லாம் செய்தாங்க. ஆனா, இங்குள்ள அரசியல்வாதிங்க சரியில்லாததால கேரள மாநிலம் விழிஞ்சத்துக்குப் போயிருச்சு அந்தத் திட்டம்'' என பொருமவும் செய்கிறார்கள்.

-மணிகண்டன் & சர்வே டீம் டீம்

தேர்தலைப் பற்றி 40வயதுக்கு மேல் உள்ளவர்களே காரசாரமாக பேசுகிறார்கள். ஆனால் இளம் வயது வாக்காளர்களோ, ""இவுங்களுக்கு ஓட்டு போட்டு என்ன நடக்கப்போகிறது, அவுங்கவங்க குடும்பமும் கட்சிக்காரங்களும் நல்லா இருக்கிற துக்கு இந்த 20 நாள் நம்பள டார்ச்சர் பண்றாங்க'' என்கிற குரல்களை அதிகம் கேட்க முடிந்தது.

திருச்சி மேற்கு தொகுதியில்  யாருக்கு ஓட்டு என்கிற கேள்வித்தாளுடன் நாம் மக்களிடம் பேப்பரை நீட்டியவுடன், ""எதுக்குப்பா நான் உன்கிட்டே சொல்ல னும். நான் யாருக்குனு சொல்லுவேன். அப்புறம் இந்த ஏரியா அரசியல்வாதிகிட்ட சொல்லி எனக்கு பிரச்சினையை உண்டுபண்ணிடுவே. எனக்கு எதுக்கு இந்த வேண்டாத வம்பு'' என்றனர் பலரும். அவர்களிடம் சர்வே படிவத்தில் டிக் வாங்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது.

""முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் புகைப்படம் எடுக்க அனுமதி மறுத்தாலும் இந்தமுறை எங்க ஜமாத்துல சொல்லிட்டாங்க. அதனால் அதன்படிதான் ஓட்டுப் போடுவோம்'' என்றவர்களின் கைவிரல்கள் விரிந்திருந்தன. கந்தர்வக்கோட்டை பகுதியில் நாம் கையில் பேப்பருடன் வருவதைபார்த்த ஒருவர், ""எங்க வீட்டில் 4 ஓட்டு இருக்கு. எங்க பேரு எல்லாம் எழுதிக்கோங்க. யாருக்கு ஓட்டுப் போடணும் சொல்லுங்க'' என்று எதிர்கேள்வி நம்மிடமே கேட்டு அதிர்ச்சியடைய வைத்தார். ஒரு பெண்மணி, ""எங்க வூட்டுல 6 ஓட்டு இருக்குது. எவ்வளவு தருவீங்க'' என்றார் ஆர்வத்துடன்.

திருவெறும்பூர் பகுதியில் நாம் சந்தித்தவர்களும், நம்மை சந்தித்தவர்களும் தி.மு.க., அ.தி.மு.க. பற்றியே அதிகம் பேசினர். டிக் செய்தனர். இத்தனைக்கும் இது தொழிற்சங்க ஏரியா. ஸ்ரீரங்கம் பகுதியில் தே.மு.தி.க.விற்கு வாக்களிப்போம் என்று சொல்பவர் கள் பி.ஜே.பிக்காகத்தான் வாக்களிக்கிறோம் என்றார்கள். இங்கே டீக்கடைகளில் மோடியை பற்றிய பேச்சு அதிகம் இருக்கிறது.

பெண்கள் வழக்கம்போல "அந்தம்மாவுக்குத்தான் எங்க ஓட்டு' என்றதைக் கேட்க முடிந்தாலும் பழைய உற்சாகம் இல்லை. 

கீரனூர், புதுக்கோட்டை பகுதியில் பல கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு என்கிற வாசகம் எழுதி வைக்கப்பட்டி ருப்பதைக் காண முடிந்தது.    
-ஜெ.டி.ஆர். & சர்வே டீம்

ad

ad