புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014


எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை :வைகோ 
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து வைகோ பேசினார். அவர்,  ‘’தமிழகத்தைச் சுற்றியும் இப்போது ஏராளமான ஆபத்துகள் காத்திருக்கின்றன.
மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி, கர்நாடகம் காவிரி யில் தடுப்பணைகள் கட்டுகிறது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கி, முயற்சித்து வருகிறது.


கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்கள் சுடப்படுகின்றனர், அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. வெகு அருகில் ஏழரைக் கோடி உறவுகள் இருந்தபோதும், ஈழத்தில் கொல்லப்பட்ட உறவுகளைக் காப்பாற்ற முடியாத நிலை பெரியார், அண்ணா, காமராஜர் காலத்தில் இல்லை. மூவரும் இல்லாதக் கவலையில் நான் இப்போது பேசுகிறேன்.
நடைபெற உள்ள தேர்தலில், தமிழகத்தில் பாஜக கூட்டணி 39 இடங்களில் வென்றால் தான் தமிழகத்துக்கு நீதி கிடைக்கும். இதுதேர்தலைக் கடந்த எனது சொந்தக் கருத்து. மோடி பிரதமரானால் இந்தக் கொடுமைகளில் இருந்து விடிவு காலம் பிறக்கும். ஈழத்துக்கு நீதி கிடைக்கும்.
ஐ.நா. மன்றத்தில் பாகிஸ்தான் கொண்டு வரும் தீர்மானங்களை இந்தியா ஆதரிக்கும் நிலை இப்போது உள்ளது. பாஜக ஈழத்தை ஏற்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மோடி பிரதமரானால், வாஜ்பாய் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை மீண்டும் கடைப்பிடிக்கப்படும்.
இலங்கைக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம், பணம் கொடுத்தாலும் ஆயுதம் தர மாட்டோம் என்றார் வாஜ்பாய். அதைப் போன்றே மோடியும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறேன். பாஜக கூட்டணி வென்றால் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அந்த ஆசையும் எனக்கு இல்லை. தமிழகத்தை கேடுகளில் இருந்து மீட்க மோடியை ஆதரிப்பது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை’’ என்றார்.

ad

ad