புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014

தென்னாபிரிக்காவின் நடுநிலையாளர் பாத்திரம் – கூட்டமைப்பு பச்சைக்கொடி

சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்குப் பகுதியில் அச்சமற்ற- இயல்பான சூழ்நிலை திரும்ப வேண்டும் என்று தென்னாபிரிக்கத் தரப்பிடம் தாம் வலியுறுத்தியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று கொழும்பு திரும்பியுள்ள நிலையில், அந்தப் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தமது பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

“தென்னாபிரிக்காவின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் அமைந்தது.

ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசின் துணைத் தலைவர் சிறில் ராமபோசா தலைமையிலான குழுவினர் சிறிலங்கா வந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

சிறிலங்கா அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுக்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தடைப்பட்டுள்ள நிலையில், அதை மீள ஆரம்பிப்பது குறித்த பேச்சுக்களை முன்னெடுக்க தென்னாபிரிக்கா முன்வந்துள்ளது.

ஒரு நடுநிலையாளராக இல்லாவிட்டாலும், அனுசரணையாளர் என்ற வகையில் சிறிலங்கா அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே அவர்கள் செயற்படுவார்கள்.

சிறிலங்கா அரசின் வேண்டுகோளின்படியே அனுசரணையாளர் எனும் பொறுப்பை தென்னாபிரிக்கா ஏற்றுள்ளது.

அதை தாங்களும் வரவேற்கிறோம்.

பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முன்னர் வடக்கு,கிழக்குப் பகுதியில் மக்களிடையே அச்ச உணர்வற்ற இயல்பான நிலை திரும்ப வேண்டும் என்பதை எமது தரப்பு தென்னாபிரிக்கத் தரப்பிடம் வலியுறுத்தியது.

சிறில் ரமபோசா தலைமையிலான குழுவினர் சிறிலங்கா வந்து சென்ற பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த விடயங்கள் தெளிவாகும்.

அரசியல் தீர்வுத் திட்டத்தின் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad