சனி, ஏப்ரல் 05, 2014


ஜெனீவாவிற்கு முன்னர் தடை செய்ய தவறி விட்டோம் - விமல் ஆதங்கம்
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டுமென விமல் வீரவன்சவின் ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது.
 
இலங்கை அரசஙர்கம் அண்மையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருந்தது.
 
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களினால் நாட்டுக்கு அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புத் தலைவர்கள் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
 
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமிழீழத்தை அமைக்கும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது.