புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014

மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள்: ஏ.கே.மூர்த்தி பிரசாரம்
மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள்: ஏ.கே.மூர்த்தி பிரசாரம்
ஆரணி பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வந்தவாசி நகரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது வாக்காளர்களிடம் பாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார். தேரடி 4 சாலை சந்திப்பில் அவர் பேசியதாவது:–
குஜராத் சமீபகாலமாக நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அங்கு அரசு நல்லமுறையில் செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் குடிநீர்
பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. மின்சாரம் இல்லாமல் தொழில்வளம் பாதிக்கின்றது. அதுபோல குஜராத்தில் தனியாக ஒருபெண் சென்று வரக்கூடிய அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் பெண்கள் தனியாக செல்ல முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என மாறி மாறி தமிழகத்தை ஆண்டு சீரழித்து விட்டனர்.
மதசார்பற்ற கட்சியின் ஆட்சி அமைய வேண்டும் என்று காங்கிரசார் கூறி வருகின்றனர். மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் இருந்த போது தான் அப்துல்கலாம் ஜனாதிபதியாக்கப்பட்டார். ஆனால் அடுத்து வந்த காங்கிரஸ் அரசு ஏன் அப்துல்கலாமை ஜனாதிபதியாக்க வில்லை. இதுதான் மதசார்பற்ற கொள்கையா. காங்கிரஸ் இந்தியாவை ஊழல் நாடாக மாற்றிவிட்டது.
நான் ஒருவன் இப்போது 10 இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டி அதற்கான எந்திரங்களை அமைத்து குடிநீர் வழங்கினேன். இதுபோன்று அரசால் முடியாதா. டாஸ்மாக் கடையில் புரளும் ஒரு ஆண்டு வருமானத்தை வைத்து குடிநீர் தாராளமாக வழங்க முடியும். உங்களுக்கு மக்கள் தொண்டு செய்ய நான் இருக்கிறேன். எனக்கு வாக்களியுங்கள், இவ்வாறு அவர் பேசினார். பா.ம.க. மாவட்ட செயலாளர் சீனுவாசன், அமைப்பு செயலாளர் பிச்சைகண்ணு, முன்னாள் கவுன்சிலர் மச்சேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் மன்னப்பன், வந்தவாசி ஒன்றியகுழு தலைவர் புனிதவள்ளி குப்புசாமி, மாவட்ட துணை செயலாளர் துரைவைத்தியலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பட்டாபிராமன், ஒன்றிய செயலாளர்கள் சிவா, பூங்காவனம், தே.மு.தி.க. நகர செயலாளர் ஜாபர், பா.ஜனதா மாவட்ட தலைவர் பாஸ்கரன், ஒன்றிய தலைவர் அரிகிருஷ்ணன் உள்பட கூட்டணி நிர்வாகிகள் பலரும் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

ad

ad