புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதாவின் அ.தி.மு.க கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்!- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
 
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழர் பற்றி அதிக அக்கறை உள்ளவர், எனவே எம் தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க கட்சிகு வாக்களிக்க வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது கட்சி அ.தி.மு.க சார்பில் பிரச்சாரம் செய்கின்றார். அவர் கடந்த காலங்களில் ஈழத் தமிழர்கள் விடயத்தில் மேற்கொண்ட தைரியமான முடிவுகள் மக்கள் இதயங்களில் அவருக்கொரு நல்ல இடத்தினைக் கொடுத்துள்ளது.
அவருக்கு ஆதரவளிப்பதே தமிழ்ச் சொந்தங்களின் சரியான தெரிவாக இருக்கும். எமது தமிழகத்து தமிழ் உறவுகள் ஜெயலலிதா அவர்களுக்கு தமது முழு ஆதரவினை வழங்கி வெற்றியடைய வைக்கவேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டிகொள்கின்றது.
ஜெயலலிதா அவர்கள், மத்திய அரசாங்கத்தின் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அரசை முற்றாக அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருவதோடு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல நடவடிக்கைகளை துணிந்து மேற்கொள்ளுகின்றார்.
இவற்றினால் காங்கிரஸ் அரசினால், ஆட்சியில் இருந்து கூட அகற்றக்கூடிய நிலை தோன்றலாம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் செயற்படுகின்றார்.
அவரது இறுக்கமான கொள்கையும் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக பொருளாதாரத் தடை கொண்டு வருதல், மற்றும் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில், பிரிந்து போதலுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துதல் மற்றும் இந்தியாவின் நட்பு நாடு இலங்கை என்ற கொள்கையை எதிர்ப்பது போன்ற முடிவுகளையும் எடுத்தார்.
இவற்றினை எல்லாம் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்தார்கள். ஆனால் ஜெயலலிதா அவர்கள் தான் எடுத்த முடிவில் தெளிவாக நின்றார்.
தற்போது இந்தியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் ஆனது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை யார் ஆட்சிபீடம் ஏறப்போகின்றார்கள் என்பதைத் தீர்மானிக்கப் போகின்றது.
அது ஜெயலலிதா அவர்களின் தலைமையில் கூட அமையலாம். எனவே அனைத்து எமது தமிழ் உறவுகளும் அவருக்கு ஆதரவு நல்லக வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

ad

ad