புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


 விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
 
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.


அந்த பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் பிரபாகரன் தங்கி இருந்த பதுங்கு குழியை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். பூமிக்கு அடியில் பாதுகாப்புடன் கோட்டை போல் அமைக்கப்பட்டு இருந்த அந்த பதுங்கு குழியை ஏராளமான பேர் சென்று பார்த்து வந்தனர். இதனால் அது சுற்றுலா தலம் போல் விளங்கியது. அந்த பதுங்கு குழியை ராணுவத்தினர் குண்டு வைத்து தகர்த்தனர்.

தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மேலும் ஒரு  வீட்டினைப் இலங்கை ராணுவத்தினர் தற்போது கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியிலேயே இந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இறுதி போரின் போது இந்த வீட்டையும், பதுங்கு குழியும் விடுதலைப் புலிகள் குண்டு வைத்து தகர்த்து உள்ளனர். இதனால் வீட்டின் உள்ளே என்ன இருக்கின்ற என்பதை இலங்கை படையினர் கண்டறிய முடியவில்லை. 

கட்டிடம் சரிந்து நுழைவாயில் அடைக்கப்பட்டு உள்ளது. எனினும், ராணுவத்தினர் துளையிட்டு பார்த்துள்ளனர். வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.

இடிந்த நிலையிலுள்ள இந்த  வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300 மீட்டர் முதல் 400 மீட்டர் வரை உள்ளது. நிலத்திற்குக் கீழ் இது அமைக்கப்பட்டு உள்ளது. மேலுள்ள வீடு செங்கலால் கட்டபட்டுள்ளது. இறுதி போரில் இந்த வீட்டிலிருந்தபோதே பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்டதாக ராணுவ தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

தற்போது இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீட்டை சென்று பார்க்க முடிகிறது. எனினும், உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

ad

ad