புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

மு. கா., அ. இ. ம. கா. விருப்பு வாக்கு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு

2 உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில்
கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப் பினராக அர்சாத் நிசாம்தீன் தெரிவா கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக பாயிஸ்
தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, 
கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு உறுப்பினரை வென்றதோடு அப்துல் ஹையே தெரிவானதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், விருப்பு வாக்கு எண்ணுவதில் தவறு இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் அழைக்ககப் பட்டு விருப்பு வாக்குகள் மீள கணக்கிடப்பட்டது.
தவறுதலாக அப்துல் ஹை தெரிவானதாக அறிவிக்கப்பட்டது குறித்து கவலை தெரிவிப்பதாக கூறிய அவர், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து அவரிடம் வருத்தம் தெரிவிக்கப்பட் டதாகவும் தெரிவித்தார். இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விருப்பு வாக்கு தொடர்பில் ஏற்பட்ட குழப்பமும் வேட்பாளர்களை அழைத்து பேசி தீர்வு காணப்பட்டதாக ஆணையாளர் கூறினார்.
இதன்படி, தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன. தோல்வியடைந்த சில உறுப்பினர்களின் விருப்பு வாக்குகளும் தவறாக வெளியிடப்பட்டதோடு அவற்றையும் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ad

ad