சனி, ஏப்ரல் 05, 2014

Sinmukm01யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் இன்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.
யாழ். பொதுநூலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நான்
யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது தடவையாக வருகை தந்துள்ளேன். முதற்தடவையாக 2012ஆம் ஆண்டு வருகை தந்தபோது இங்குள்ள மக்கள் தமது தேவைகளைக் கூறினார்கள்.
அதன் பின்னர் சிங்கப்பூரில் பல தரப்பினரையும் சந்தித்து இலங்கை மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பல திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்தோம்.
அந்தவகையில்தான் யாழ்ப்பாணத்தில் கல்வியைப் போற்றும் கலாசாரம் காணப்படுகின்றதால் கல்வித் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்தோம் என்று கூறினார்.
மக்களின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் என்பதுடன் அவர்களின் பிள்கைளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கல்வித்திறனை மேம்படுத்த தீர்மானித்தோம்.
ஆங்கில கல்வியை ஆசிரியர்களுக்கு புகட்டுவதனால் பல மாணவர்களின் ஆங்கிலக் கல்வியினை மேம்படுத்த முடியும். அவ்வாறு முன்னேற்றுவதற்கு ஆங்கிலம் அடித்தளமாக அமைய வேண்டும்.
இதனால் 3 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் யாழ். பொது நூலகத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்பளிப்பு செய்துள்ளோம். இத்திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
யாழில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதிகமான மக்கள் வீதிகளில் நடமாடுகின்றார்கள். அத்துடன் வியாபார சூழல் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Sinmukm  Sinmukm02
0