புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2014


மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு மீது மு.க.அழகிரி கடும் தாக்கு
நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற தனது ஆதரவாளர் கபிலன் இல்ல காதணி விழாவில் மு.க.அழகிரி பங்கேற்று பேசினார்.



அப்போது அவர்,   ‘’ மரி மாவட்டத்தில் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றபோது பொறுப்புகள் தரப்படும் என்று கூறி பலர் ஏமாற்றப்பட்டதாக இங்கு பேசியவர்கள் தெரிவித்தனர்.  இத்தொகுதியின் எம்.பி.யாக உள்ள ஹெலன் டேவிட்சனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
தில்லி திஹார் சிறையில் கனிமொழி இருந்தபோது, ஹெலன் டேவிட்சன் அவரை சந்தித்து உதவினார். அதனால் அவருக்கு மீண்டும் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை.

கடந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு வென்ற டி.ஆர்.பாலு இப்போது தஞ்சாவூரில் போட்டியிடுகிறார். தொகுதி மாறி போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு அவர் எம்.ஜி.ஆரோ, கருணாநிதியோ கிடையாது. சேது சமுத்திரத் திட்டத்தில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். கப்பலுக்குச் சொந்தக்காரர் குறித்து உரிய நேரத்தில் பேசுவேன்.
கட்சியின் பொருளாளருக்கு கட்சியின் வரவு, செலவுக் கணக்குகளைப் பார்ப்பதுதான் வேலை. அதை விடுத்து மற்ற வேலைகளை அவர் செய்து வருகிறார். தொண்டர்கள் கட்சியின் தலைமைக்கு அனுப்பும் கடிதங்கள், பேக்ஸ்கள் திமுக தலைவருக்கு கிடைக்காமல் இடையில் தடுக்கப்படுகின்றன.
தேர்தலின்போது தொண்டர்களுக்கு கலைஞர் கடிதம் எழுதுவார். இப்போது அவ்வாறு இல்லை. தொண்டர்கள் குமுறலில் உள்ளனர். மாவட்டச் செயலர்களே தொண்டர்களைப் பற்றி கவலைப்பட வில்லை. அவர்கள் ஒரு குறுநில மன்னர்கள்போல் செயல்படுகின்றனர்.
தேர்தலுக்குப் பின் நிலைமை மாறும். இப்போது வெளியே இருப்பவர்கள் அப்போது உள்ளே செல்வார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியே வருவார்கள்  ’’ என்றார் அழகிரி.

ad

ad