புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

விருதுநகரில் போட்டியிட காரணம்: வைகோ விளக்கம்

தான் எந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்டவே விருதுநகரிலேயே போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
வியாழக்கிழமை தெரிவித்தார்.
தேனி அல்லிநகரத்தில் தேனி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் அழகுசுந்தரத்தை ஆதரித்து திறந்த வேனில் வாக்குச் சேகரித்து அவர் பேசியது: தேனி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அழகுசுந்தரம் ஈடு இணையற்ற பேச்சாளர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் மதிமுக வில் பணியாற்றி, என்னோடு 19 மாதங்கள் சிறையில் இருந்த அழகுசுந்தரம், இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது.
தேனி மக்களவை தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் என்னிடம் விருப்பம் தெரிவித்தனர். இந்த செய்தியறிந்து, நான் விருதுநகரில் போட்டியிட அஞ்சி வேறு தொகுதிக்குச் செல்லப் போவதாக திமுக கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினர்.
எனக்கு பதவி ஆசையென்று ஒன்றுமில்லை. பெரியாரைப் போல வாழ்ந்து விட்டுச் செல்லவே விரும்புகிறேன். ஆனால், நான் கோழையல்ல. எந்த தொகுதியில் நான் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக விருதுநகரிலேயே போட்டியிடுகிறேன். தேனி தொகுதியில் தகுதியுள்ள எனது தம்பியை நிறுத்தியுள்ளேன்.
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் பிரச்னையில் கட்சிக் கொடியின்றி, அரசியல் சாயமின்றி 600-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளேன்.
தேனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளேன். இந்தப் போராட்டத்துக்கு ஜாதி, மதம், அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். பெரியாறு அணைக்கான ஆபத்து இன்னும் நீங்கவில்லை. புதிய அணை கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி இன்னும் இருப்பில் உள்ளது.
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட பின்புதான், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்னல் பென்னி குவிக்கிற்கு சிலை திறப்பு நடைபெற்றது. பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் 33 முறை வாய்தா வாங்கி தமிழகத்துக்கு கருணாநிதி துரோகம் செய்துள்ளார்.

ad

ad