புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014

தேர்தல்கால வீரவசனம் பேசிய அமைச்சர்கள் பொதுபல சம்பவத்தில் மௌனம் ஏன்?

தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளுக்காக வீரவசனம் பேசும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றைய பொதுபல சேனாவின் சம்பவம் தொடர்பில் மௌனம் சாதிப்பது
ஏன்? என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் கேள்வி எழுப்பினார்.
இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 
பொலிஸாருக்கு மத்தியில் இருந்துகொண்டு இவ்வாறு செய்ததில் அரசாங்கத்தின் பின்புலம் இருந்திருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. முஸ்லிம்களுக்கு இவ்வளவு கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசியபோதும் அரசாங்கத்தில் இருந்துகொண்டு எதுவும் பேசாமல் மௌமாக இருப்பது எவ்வளவு கேவலமானது. 
இதுபோன்ற, மோஷமான செயற்பாடொன்று நடைபெற்ற பிறகும் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்காமல் அரசாங்கத்திலுள்ள குறிப்பிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் அரசிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாகவாவது முடியுமானால் காட்டட்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் மேலும் குறிப்பிட்டார். 

ad

ad