புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2014

 பேரறிவாளன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்பதுதான் தமது கருத்து என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

பேரறிவாளன் வழக்கில் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்து இருந்தார். அதில், சதாசிவத்தின் கருத்து நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா என கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.



இதனிடையே, தனது மகன் பேரறிவாளன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அவரது தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதியிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

பேரறிவாளன், சாந்தன், முருகன் விடுதலை பற்றி உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் வெளியிட்ட கருத்தை, அரசியல் ஆக்க வேண்டாமென்று பேரறிவாளனின் தாயார் சொல்லியிருக்கிறாரே?

அவர்களை விடுவிக்க வேண்டுமென்று தி.மு.கழகம் கோரிக்கை வைத்ததை அனைவரும் அறிவார்கள். ஆனால் நீதிபதிகள் இது போன்ற விஷயங்களை அரசியல் ஆக்கக் கூடாது என்பதற்காகத் தான் சதாசிவம் பொது விழா ஒன்றில் இது பற்றி பேசுவது சரிதானா என்று கேட்டிருந்தேன். அரசியல் ஆக்குவதற்காக அல்ல.

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்றையதினம் சென்னையில் பேசும்போது, தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தன்னலத் திட்டங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?

சொத்துக் குவிப்பு வழக்கு எங்கள் மீது நடக்கவில்லை. அவர் மீது தான் நடக்கிறது. கிட்டத்தட்ட நான்காயிரம் கோடி முதல், ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக் குவிப்பு வழக்கு அந்த அம்மையார் மீது தான் நடக்கிறது.

ஜெயலலிதா நேற்று பேசும்போது, சேது சமுத்திரத் திட்டம், தங்க நாற்கரை சாலைத் திட்டம் போன்றவற்றில் டி.ஆர் பாலுவுக்கு உள்ள ஈடுபாடு பற்றி மு.க. ழகிரி சாட்டிய குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டிருக்கிறாரே?

யார் குற்றம் சாட்டினார்கள் என்பதல்ல; திட்டவட்டமாக டி.ஆர். பாலு என்ன தவறு செய்தார் என்பதைச் சொல்லட்டும்.

தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து, நாளையோடு பிரசாரம் முடிவடைகின்ற நிலையில் உங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?


நன்றாக இருக்கிறது.

ad

ad