புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

மக்களவை தேர்தல் முடிவு குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில்,  பாஜ.வுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவமான என்டிடிவி, சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 

* டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாக மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
கூட்டணி,பெரும் பின்னடைவை சந்திக்கும். 

* ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, டெல்லி மாநிலங்களில் உள்ள 114 தொகுதிகளில் 86 தொகுதிகளை பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும். அதேபோல், பீகார் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 169 தொகுதிகளில் 76 தொகுதிகளை இந்த அணி கைப்பற்றும். 

* ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், டெல்லி மாநிலங்களில் ஐமு கூட்டணி 29 இடங்களையும், பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் 25 இடங்களையும் கைப்பற்றும்.

* மேற்கண்ட மாநிலங்களில் இருந்து பாஜ கூட்டணிக்கு 160 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 54 இடங்களும் கிடைக்கும்.

* ஆந்திராவை பொருத்தவரை சீமாந்திரா பகுதியில் தெலுங்கு தேசம், பாஜ மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்கும், தெலங்கானாவில் காங்கிரஸ், டி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்படும்.

* மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணி 36 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பீகாரில் பாஜ கூட்டணி 21 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களிலும் வெற்றி பெறும்.

* பாஜ கூட்டணி ராஜஸ்தானில் பெரும்பான்மையான இடங்களையும், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக இடங்களையும் பெறும். அரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜ இடையே கடுமையான போட்டி ஏற்படும்.

* பஞ்சாபில், பாஜ-அகாலிதளம் கூட்டணி 42 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் அணி 29 சதவீத ஓட்டுக்களையும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரசும், பாஜவும் 45 சதவீத ஓட்டுக்களை பெற்று கடுமையான போட்டியை உருவாக்கும்.

* நாடு முழுவதும் பாஜ கூட்டணி 40 சதவீத ஓட்டுக்களையும், ஆம் ஆத்மி 29 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 22 சதவீத ஓட்டுகளையும் பெறும்.
இவ்வாறு கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. - See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=1056#sthash.IZIWWRPe.dpuf

ad

ad