புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

சென்னை தேர்தல் பிரசாரத்தில் திமுக, அதிமுக மீது மோடி தாக்கு!

சென்னை: திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடம் தமிழக மக்கள் சிக்கி தவிப்பதாகவும், இவ்விரு கட்சிகளும் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து திமுக
மற்றும் அதிமுக கட்சிகள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது எனவும், மக்களவைத் தேர்தல் நம்பிக்கைக்கான தேர்தல் என்றும் அவர்  கூறினார்.

மீனவர்கள் வாழ்வில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு புது வாழ்வு பிறக்கும். மீனவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்:
இந்தியர்கள் எங்கு வாழ்ந்தாலும் இந்தியாதான் அவர்களுக்கு தாய். வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் வாழ நடவடிக்கை. மலேசியா, இலங்கை, சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக போராட வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது நலனில் அக்கறை கொள்வோம்.
இலங்கை போன்ற சிறிய நாடுகள் கூட இந்தியா போன்ற பெரிய நாட்டை மிரட்டுகின்றன.பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றால் மத்தியில் ஆற்றல்மிக்க அரசு அமையும். 
பா.ஜனதா பதவியேற்றால் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மோடி மேலும் கூறினார்.
பா.ஜனதாவை விமர்சித்ததால் மோடியும் அதிமுக மீது தாக்கு!
தேர்தல் பிரசார கூட்டங்களில் இதுவரை பா.ஜனதாவை ஜெயலலிதா விமர்சிக்காமல் இருந்துவந்ததால், தேர்தலுக்கு பின்னர் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவளிக்கக் கூடும் என்று கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூறிவந்தன. அதேப்போன்று திமுகவும் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து ஜெயலலிதா தனது நிலைமையை தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், கரூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வால் ஆட்சி அமைக்க முடியாது. காவிரி நதிநீர் பிரச்னையில் காங்கிரஸ் மற்றும்
பா.ஜ.க. இரண்டு கட்சிகளுமே தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளன. காவிரி நதிநீர் ஆணையத்தால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படவில்லை" என்றார்.
ஜெயலலிதாவின் இந்த பேச்சை தொடர்ந்தே அதிமுகவையும் மோடி விமர்சித்ததாக தெர்கிறது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் நிலைமை மாறலாம்.

ad

ad