புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014

புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் தீவிரமாக சேகரிக்கின்றனர்

புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்
அரியநேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது பற்றி மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கிலிருந்து 1983ஆம் ஆண்டுக்குப் பின் புலம்பெயர்ந்தவர்கள் யார் என்ற விபரங்களைத் திரட்டி மீண்டுமொரு தடைப்பட்டியலை தயாரிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவகர்களின் ஊடாக புலம்பெயர்ந்தோரின் குடும்ப விபரங்கள் திரட்டும் பணியில் புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் அமர்த்தப்பட்டுள்ளனர். கிராம சேவை உத்தியோகத்தர்கள் இது தொடர்பான விபரங்களை திரட்டுவது கடினமான காரியமென எடுத்துக்கூறிய போதும் புலனாய்வுப்பிரிவினர் வாக்காளர் இடாப்பை வைத்து தயாரித்துத் தரும்படி அறிவுறுத்தல் வழங்கியிருந்தனர். வாக்காளர் இடாப்பின் மூலமோ, குடும்ப அட்டையின் மூலமோ மேற்படி தகவல்களைப் பெறுவது கஷ்டமான காரியம் என அவர்கள் எடுத்துக் கூறியதற்கு அமைய புலனாய்வுப் பிரிவினரும் இராணுவமும் மேற்படி தகவல்களை நேரடியாகப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் இத்தகைய தகவல்களை திருகோணமலை பிரதேசத்தில் பெற்ற பின்பு ஏனைய பிரதேசங்களில் திரட்டி கடந்த வாரம் 16 அமைப்புகளையும் 424புலம் பெயர் சமூகத்தையும் தடை செய்தது போலவே ஒட்டுமொத்த புலம் பெயர் சமூகத்தையும் தடைசெய்ய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல்வேறு அமைப்புகளுக்கு சென்று மறுவாழ்வு அளிக்கப்பட்டவர்களையும் இயல்பு வாழ்க்கை வாழுகின்றவர்களையும் கணக்கெடுக்கும் முயற்சியிலும் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கை மூலம் மீண்டுமொரு குழப்ப நிலைமை வடகிழக்கில் உருவாக்கவே அரசாங்கம் பிரயத்தனம் செய்து வருகின்றது. மிக விரைவில் 1983ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கையை விட்டு வெளியேறிய புலம் பெயர் சமூகத்தின் தடைப்பட்டியல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்தார்.

ad

ad