புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014


இலங்கை இராணுவத்தினரின் குடும்பப் படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை- பி.பி.சி 
இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய விவரங்களை பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
இந்த அமைப்பு வெளியிட்ட விவரங்களில் இலங்கை இராணுவத்தினர் பலரது புகைப்படங்கள் மட்டுமல்லாமல், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவரங்களில் காணப்படுவோர் உண்மையில் இந்தக் குற்றங்களை இழைத்தார்களா என்பது குறித்த ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டதற்கு பதிலளித்த இந்த அமைப்பைச் சேர்ந்த ஆழியன், இது குறித்த ஆதாரங்களை தாங்கள் ஐநா போன்ற அமைப்புகளுக்குத் தரவிருப்பதாக கூறினார்.
ஆனால் போரில் ஈடுபடாத இராணுவத்தினரின் குடும்பத்தினர் குறித்த தரவுகளை பிரசுரித்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஆழியன்,
இராணுவத்தினர் போர்முனைக்கு அனுப்பப்படும் போது, அரசு, அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கௌரவித்து அனுப்பியது என்ற பின்னணியில் இந்தப் படையினர் போர்முனையில் என்ன குற்றங்களை இழைத்தார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்றே கூறமுடியும்.
எனவே அந்தப் படங்களைப் பிரசுரித்ததில் தவறில்லை என்றார்.
அது போல, அவர்களது அந்தரங்க உரிமைகளும் இதனால் மீறப்பட்டதாகக் கூறுவது தவறு.
ஏனென்றால் சிங்கள படையினர் வன்னியில் போர் நடந்த போது இழைத்த மனித உரிமை மீறல்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர் என்றார் அவர்.

ad

ad