புதன், ஏப்ரல் 02, 2014

அனார்கலியுடன் இருக்கும் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்!- அஜித் பிரசன்ன
நடிகை அனார்கலியை தன் மடியில் அமர்த்தி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும் என தென் மாகாண சபையின் ஆளும் கட்சியின் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொள்ளையிட்டு அந்த பணத்தை தேர்தலில் செலவிட்டிருந்தால் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியும்.
எதிர்காலத்தில் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் வங்கிகளில் கொள்ளையிட்டு பிரபலமாகினால் போதுமானது.
அதிகளவில் சுவரொட்டியும், கட்அவுட்களை வைக்கும், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை செய்யும் மற்றும் குடை மற்றும் செல்போன்களை வழங்கும் வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்கின்றனர்.
இது காலியில் உறுதியாகியது. அனார்கலியை மடியில் வைத்து கொண்டு படம் ஒன்றை அடுத்து அதனை சுவராட்டியாக அச்சிட்டு சுவர்களில் ஒட்டியும் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தால், நானும் அனார்கலியும் தேர்தலில் வென்றிருப்போம் என்றும் அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.