புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2014

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை! 
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இந்நிலையில், உடல் நிலையை காரணம் காட்டி சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. 

இந்த வழக்கில் இறுதி வாதம் செய்யாமல் காலம் கடத்தி வந்த அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு பெங்களூரு நீதிமன்ற நீதிபதி இரண்டு முறை அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad