புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014



தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற ஆசிரியை காதலடன் சேர்த்து வைக்க கோரிக்கை

தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி ஆசிரியை உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
டி.ஐ.ஜி. அலுவலகம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகள் கன்னிகா பரமேஸ்வரி(வயது 28). இவர் இன்று காலை தஞ்சை போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்தார். அவருடைய உறவினர்கள் சிலரும், அவருடன் வந்திருந்தனர். திடீரென அவர்கள் டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் கன்னிகா பரமேஸ்வரி தெரிவித்த தகவல்கள் வருமாறு:–
நான் நாகையில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்தேன். அப்போது எனக்கும், ஆயக்காரன்புலம் மலையான்குத்தகை பகுதியை சேர்ந்த வேதையன் என்பவரின் மகன் பாண்டியராஜனுக்கும் நட்பு ஏற்பட்டது. தற்போது பாண்டியராஜன் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
ஆசிரியை
இந்த நிலையில் என்னிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்த பாண்டியராஜன், என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் உறுதி அளித்தார். நானும் அவரை காதலித்தேன். இதற்கிடையே நாகையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பாண்டியராஜன் என்னை பார்க்க வருவார். அப்போது நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளோம்.
 இதற்கிடையே எனக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதையறிந்த பாண்டியராஜன், எனது வீட்டிற்கே வந்து என் தம்பியை சந்தித்து உன் அக்காவை நான் திருமணம் செய்து கொள்கிறேன், வேறு யாருக்கும் திருமணம் செய்து கொடுத்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். இதனால் என் திருமணம் நின்றது.
உண்ணாவிரதம் இருக்க முயற்சி
 இந்த நிலையில் திடீரென பாண்டியராஜன் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். இதுகுறித்து நான் வாய்மேடு போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே பாண்டியராஜனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நான் கடந்த 9–ந் தேதி டி.ஐ.ஜி. சஞ்சய் குமாரிடம் புகார் மனு கொடுத்தேன். இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் இப்போது உண்ணாவிரதம் இருக்க வந்தேன் என்று தெரிவித்தார். போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எனது காதலன் பாண்டியராஜனை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
அவருக்கு அறிவுரை கூறிய போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து கன்னிகா பரமேஸ்வரி தனது உறவினர்களுடன் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

ad

ad