புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

ஜோசப் பரராஜசிங்கம், லசந்த விக்ரமதுங்க ஆகியோரை இலங்கை அரசே படுகொலை செய்தது!- சொல்ஹெய்ம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே படுகொலை செய்தது என்று, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் நடந்த விவாதம் ஒன்றிலேயே எரிக் சொல்ஹெய்ம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை  விடுதலைப் புலிகளே படுகொலை செய்தனர்.
அதுபோலவே, ஜோசப் பரராஜசிங்கத்தையும், லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே படுகொலை செய்தது என்று எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வேயின் அனுசரணையுடனான போர் நிறுத்த உடன்பாடு நடைமுறையில் இருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது தேவாலயத்துக்குள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad