புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014


ரஜினிகாந்த் என் நண்பர். அவருக்கு ஒரு கடமை இருக்கிறது: ராம்ஜெத்மலானி பேட்டி
சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீலும், பாராளுமன்ற மேல்சபை உறுப்பினருமான ராம்ஜெத்மலானி, சனிக்கிழமை மதுரை வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், 


குஜராத்தில் அனைத்து முஸ்லிம் இனத்தவரும் சிறந்த கல்வியை பெற மோடி வழி வகுத்துள்ளார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர். நேர்மையானவர்.
மோடியைபோல் நேர்மையும், தைரியமும் கொண்டவர் வைகோ. அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன். பாரதீய ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வைகோ முயற்சி செய்தார், ஆனால் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டு, தான் முயற்சி எடுத்ததுபோல் காட்டிக்கொண்டார்.
நமது நாட்டில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் 70 லட்சம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன். தேர்தல் கமிஷனும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதி இருக்கிறேன்.
ரஜினிகாந்த் தமிழகத்தில் பிரசித்தி பெற்றவர். என் நண்பர். அவருக்கு ஒரு கடமை இருக்கிறது. மோடியை நமது நாட்டின் பிரதமராக்குவதற்கு ரஜினிகாந்தின் சக்தியை பயன்படுத்த வேண்டும்.  மோடி பிரதமராவதை அவர் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறினார்.

ad

ad