புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, முதன்முதலில் களம் இறங்கிய தொகுதி திண்டுக்கல். இங்கு தே.மு.தி.க. சார்பில்
வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி-யான சித்தன், சி.பி.எம். சார்பில் மாவட்டச் செயலாளர் பாண்டி, ஆம் ஆத்மி சார்பில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளஞ்செழியன் ஆகியோர் களத்தில் இருந்தாலும், போட்டி என்னவோ தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையில்தான்! 
 எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் இரட்டை இலைக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், நிலக்கோட்டை நகரச் செயலாளர் உதயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட... அ.தி.மு.க-வினர் சோர்ந்து போனார்கள். இவர் தொகுதி முழுவதும் அறிமுகம் இல்லாதவர் என்பதோடு, உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலராக நின்று தோல்வியைத் தழுவியவர் என்பதும் தொண்டர்களின் சோர்வுக்கு முக்கியக் காரணம்.
அதே நேரம் அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த முன்னாள் துணை சபாநாயகரான காந்திராஜனை வேட்பாளராகக் களமிறக்கியது தி.மு.க. தங்கள் வேட்பாளர் தொகுதி முழுக்க நன்கு அறிமுகமானவர் என்பதால், தி.மு.க-வினர் உற்சாகத்தோடு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். குடிநீர் வடிகால் வாரியத் தலைவராக இருந்தபோது திட்ட வரைவு தயார் செய்து திண்டுக்கல் நகருக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் அரசு மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனைக்கூடம் உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுத்தது, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய முயன்றபோது அதைப் போராடித் தடுத்தது... என தனது முந்தைய கால சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டு வருகிறார் காந்திராஜன்.
அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லி வாக்கு கேட்டு வருகிறார்கள். கொடைக்கானல் மலையில் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் அ.தி.மு.க. வேட்பாளரை ஊருக்குள் விடவே இல்லை. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நேரடியாக அந்தக் கிராமங்களுக்குப் போய் பேச்சுவார்த்தை நடத்தியும், இன்னமும் மக்கள் சமாதானம் ஆனதாகத் தெரியவில்லை. திண்டுக்கல், பழநி பகுதிகளில் கணிசமான வாக்குகளை கம்யூனிஸ்ட் பிரிப்பதும் அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக இருக்கிறது. தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் பெயரளவுக்குதான் பிரசாரம் நடக்கிறது. காங்கிரஸ் களத்தில் இருந்தாலும், காட்சியில் இல்லை.
காந்திராஜன் பக்கமே காற்றடிப்பதால், வெற்றிக் கனியைப் பறிக்கும் வாய்ப்பு தி.மு.க-வுக்கே அதிகம்.
 *******
 
டெக்ஸ்டைல் நகரமான கரூர் தொகுதி... திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் வரை விரிந்துள்ளது. அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி. தம்பிதுரையும், தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமியும், தே.மு.தி.க. சார்பில் என்.எஸ்.கிருஷ்ணனும், காங்கிரஸில் ஜோதிமணியும் களமிறங்கியுள்ளனர். ஆனாலும் போட்டி என்னவோ அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான்!
தம்பிதுரையை எப்படியாவது கரை சேர்த்துவிட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இங்கே வேட்பாளரது ஒரே பலம் இரட்டை இலை மட்டும்தான். ஓட்டு கேட்டுச் செல்லும் பல ஊர்களில் தம்பிதுரைக்கு எதிர்ப்பு பலமாகவே இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்காததும், தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யாததுமே அதற்குக் காரணம். குடிநீர் பிரச்னை, பவர் கட் என அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பைக் கூட்டியிருக்கிறது.
தி.மு.க. வேட்பாளர் சின்னச்சாமி மூத்த அரசியல்வாதி. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்தவர். இவருக்கு அ.தி.மு.க-விலும் நண்பர்கள் அதிகம். பதவியில் இல்லாத சமயத்திலும், தொகுதிக்குள் நடக்கும் எல்லா நல்லது கெட்டது​களுக்கும் தவறாமல் தலைகாட்டி வந்திருக்கிறார். கட்சியைத் தாண்டி நிறையவே நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். மாவட்டப் பொறுப்பாளரான நன்னியூர் ராஜேந்திரனும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வான கே.சி.பழனிசாமியும் வரிந்துகட்டிக்கொண்டு சின்னச்சாமிக்காக வேலை செய்கிறார்கள். அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலரே, 'சின்னச்சாமிக்காக ஓட்டுப் போடுவோம்’ என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள். மணப்பாறை, விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் அ.தி.மு.க-வுக்கான செல்வாக்கு கூடுதலாக இருக்கிறது.
தே.மு.தி.க. வேட்பாளரான என்.எஸ்.கிருஷ்ணன் முன்பு அ.தி.மு.க-வில் இருந்தவர். இங்கே கூட்டணி கட்சிகளின் பலமும் இல்லாததால் கிருஷ்ணனின் பயணம் ஸ்லோவாகத்தான் இருக்கிறது. மோடி அலையை மட்டுமே கிருஷ்ணன் நம்பியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தொகுதி முழுக்க நன்கு அறிமுகமானவர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். 'என்னிடம் தேர்தல் செலவுக்குப் பணம் இல்லை. நீங்க கொடுத்தால் வாங்கிக்குவேன்...’ என்று கேட்டபடியே வாக்கு சேகரிக்கிறார் ஜோதிமணி. கதர் சட்டை அணிந்த பழுத்த காங்கிரஸ் பெரியவர்கள் நான்கு பேர் புடைசூழ பிரசாரத்துக்கு வருகிறார் ஜோதிமணி. டெபாசிட் வாங்கினால் போதும் என்பதே ஜோதிமணியின் எதிர்பார்ப்பு.
எப்படிப் பார்த்தாலும் சிக்குபுக்கு ரயில் ஏறி டெல்லிக்குக் கிளம்பத் தயா​ராகி​விட்டார் சின்னச்சாமி!
 *****
 
ஆறு முனை போட்டியில் விழிபிதுங்கி நிற்கிறது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி.
அ.தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.பி-யான குமார், தி.மு.க. சார்பில் முன்னாள் திருச்சி துணை மேயர் அன்பழகன், காங்கிரஸ் சார்பாக முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், தே.மு.தி.க. சார்பில் மாநில மாணவர் அணி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், சி.பி.எம். சார்பில் ஸ்ரீதர் ஆகியோர் களம் காண்கிறார்கள்.
பரவலாக வாக்குகளைக்கொண்ட கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளன அரசியல் கட்சிகள்.
சிட்டிங் எம்.பி-யான குமார், கடந்த மூன்று வருட அ.தி.மு.க. ஆட்சியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குத் திட்டங்கள் கொண்டுவரவில்லை என்பது மைனஸ். ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் இந்தத் தொகுதிக்குள் வருகிறது என்பது கூடுதல் பலம். அதனால், அமைச்சர்களின் ஒத்துழைப்பும் பலமாக இவருக்கு இருக்கிறது.
தி.மு.க. வேட்பாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி. நேருவுக்கு எதிரணியாகச் செயல்படும் திருச்சி சிவா, செல்வேந்திரன் உள்ளிட்டவர்களை அன்பழகன் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை எனும் பேச்சு இருக்கிறது. தொகுதியில் உள்ள முத்தரையர் வாக்குகளைப் பெற நேரு முயற்சி எடுத்தார். இந்த நிலையில் முத்தரையர் சங்கத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது இவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மாநாடு நடத்தி சூட்டைக் கிளப்பிய நகரம் என்பதால், அதனைக் கைப்பற்றத் துடிக்கிறார் நேரு.
தே.மு.தி.க. வேட்பாளர் விஜயகுமாருக்கும் திருச்சி மாநகரச் செயலாளர் விஜயராஜனுக்கும் ஏழாம் பொருத்தம். பி.ஜே.பி. ஆதரவு, மோடி வந்து பேசியது ஆகியவற்றை அதிகமாக நம்பி நிற்கிறார் விஜயகுமார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் தனித்தனி அணியாக நீடிப்பது சாருபாலாவுக்கு சறுக்கல். திருச்சி மேயராக இருந்தவர். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். தனக்கு வெற்றிவாய்ப்பு குறைவுதான் எனத் தெரிந்துகொண்ட சாருபாலா, செயல்பாடுகளில் சுணக்கம் காட்டிவருகிறாராம்.
சி.பி.எம். வேட்பாளர் ஸ்ரீதரும் ஆம் ஆத்மி வேட்பாளர் ரவியும் ஓரளவுக்கு வாக்குகளைப் பிரிப்பார்கள்.
கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சி வந்த ஜெயலலிதா, 'திருச்சி நாடாளுமன்றத் தொகுதியும் எனது தொகுதிதான்’ என்று பேசிவிட்டுப் போனார். அதனால் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆக, கடைசி கட்டத்தில் சிட்டிங் எம்.பி-யான குமார் எல்லோ

ad

ad