புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014


காணாமல்போன சில நபர்கள் குறித்து எவ்வித ஆதாரமும் இல்லை: ஜனாதிபதி ஆணைக்குழு 
ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாசா இதுகுறித்து குறிப்பிடுகையில்,
யுத்தத்தில் காணாமல்போன சில மக்கள் பற்றி எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில முறைப்பாடுகளை விசாரணை செய்யும்போது, அந்நபர்கள் எங்கே, எப்படி காணாமல்போனார்கள் என்பது குறித்த எந்த வித தகவலும் கிடைக்கவிலை. இது பாரிய பிரச்சினையாக உள்ளது. எனினும், அம்முறைப்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்தும் விசாரணை செய்து வருகின்றோம்.
காணாமல்போன நபர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் இறப்பு சான்றிதழை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனையடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்களை பற்றிய ஆதாரங்கள் குறைவாக இருந்தபோதிலும் ஆணைக்குழு அவர்களைக் கண்டுபிடிக்கும் என மக்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடத்திய விசாரணையில், மக்கள் நல்ல மன நிலையில் இல்லை எனவும், சில குடும்பங்களில் 9-10 நபர்கள் காணாமல் போனதால் அக்குடும்ப உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் கலந்துரையாடியதை அடுத்து, குடும்ப மக்களுக்கு ஆலோசனை முகாம் நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ad

ad