புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

பிணங்களைத் திருடி சமைத்து உண்ட பாகிஸ்தான் நபர் கைது 
நூற்றுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் உண்டதாக பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
வயதான இவர் ஏற்கனவே நரமாமிசம் சாப்பிட்டதாக சகோதரருடன் கைது செய்யப்பட்டவர். அப்போது சுமார் 100க்கும் அதிகமான சடலங்களை சமைத்துச் சாப்பிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற அவர்கள் கடந்தாண்டு தான் விடுதலை செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆரிப் அலி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலிலுள்ளவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
 
அதனைத் தொடர்ந்து ஆரிப் அலி வீட்டில் பஞ்சாப்  பொலிஸார் நடத்திய சோதனையில் சிறு குழந்தையின் பிணம் ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
 
கால்பகுதி வெட்டப்பட்டு இருந்த அந்த சடலத்தின் தலை வீட்டின் வேறொரு பகுதியில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப் பொலிஸார் ஆரிப் அலியை கைது செய்தனர்.
 
ஆரிப் அலி இறந்த சிறு வயது குழந்தையை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுத்து அதன் கால் பகுதியை வெட்டி எடுத்து சமைத்து உண்டதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
நரமாமிசம் உண்பவர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் நேரடிச் சட்டம் ஏதும் இல்லாத காரணத்தால், ஆரிப் அலி மீது சமாதியின் புனிதத்தைக் கெடுத்ததாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ad

ad